கடன் தீர்க்கும் செவ்வாய்.. பலன்கள் இதோ..!

0
193
#image_title

கடன் தீர்க்கும் செவ்வாய்.. பலன்கள் இதோ..!

பொதுவாக செவ்வாய் கிழமையில் எந்த ஒரு சுப நிகழ்ச்சிகளும் நடைபெறுவதில்லை. இதற்கு ஆன்மீகத்தில் பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

நகம், முடி வெட்டக் கூடாது… நகை வாங்கக் கூடாது… எந்த ஒரு காரியாயத்தையும் செவ்வாய் அன்று தொடங்க கூடாது என்று சொல்வதை கேள்விப்பட்டு இருப்போம். இந்த வழிமுறையை நாமே கூட பின்பற்றி வருவோம்.

ஆனால் செவ்வாய் கிழமை சில விஷயங்களுக்கு உகந்த நாள். கடனை முழுமையாக தீர்க்கும் செவ்வாய்.

செவ்வாய் கிழமை செவ்வாய் ஓரையில் வாங்கிய கடனை கொடுத்தால் திரும்ப கடன் வாங்கும் நிலை ஏற்படாது. அதேபோல் செவ்வாய் கிழமை அன்று கடன் கொடுத்தால் கொடுத்த கடன் தொகை விரைவில் திரும்ப கிடைக்கும்.

கடன் கொடுக்க வாங்க மட்டும் செவ்வாய் உகந்த நாள் அல்ல… இன்னும் சில விஷயங்களுக்கும் செவ்வாய் சிறப்பான நாள் தான்.

உடலில் பல நோய் வைத்திருப்பவர்கள் செவ்வாய் கிழமை செவ்வாய் ஓரையில் சிகிச்சை பெற்று வந்தால் நோய் அனைத்தும் குணமாகும்.

வழக்கு, நிலப்பிரச்சனை உள்ளிட்டவைகளை செவ்வாய் கிழமை அன்று பார்த்தால் தீர்வு கிடைக்கும்.