முதியோர்களுக்கான உதவித்தொகையை அதிகரிக்க முடிவு!! அமைச்சரவையில் வெளியான தகவல்!!

Photo of author

By CineDesk

முதியோர்களுக்கான உதவித்தொகையை அதிகரிக்க முடிவு!! அமைச்சரவையில் வெளியான தகவல்!!

தமிழகத்தில் உள்ள முதியோர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் தமிழக அரசு சார்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது இந்த ஆயிரம் ரூபாய் உதவித்தொகையில் கூடுதலாக இருநூறு ரூபாய் சேர்த்து 1200 ரூபாயாக வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் பல திட்டங்களை பற்றி பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது முதியோர்களுக்கான உதவித்தொகையை அதிகப்படுத்துவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் மாதம் பதினைந்தாம் தேதி முதல் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க தீவரமாக பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கான டோக்கன்கள் நேற்று முதல் வழங்க ஆரம்பித்த நிலையில், தற்போது இந்த பணியில் பதினைந்து சதவிகிதம் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது.

மேலும், இந்த உரிமைத் தொகைக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட இருப்பதாக மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்கான விண்ணப்ப படிவங்கள் அனைத்து பகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்ப படிவங்களுக்கு எந்த ஒரு கால அவகாசமும் கிடையாது.

இவ்வாறு தமிழகம் முழுவதும் இந்த மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், தற்போது முதியோர்களுக்கான உதவி தொகையை உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.