சுவையான பைனாப்பிள் ஜாம் – எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா?

Photo of author

By Gayathri

சுவையான பைனாப்பிள் ஜாம் – எப்படி செய்யலாம்ன்னு தெரியுமா?

அன்னாசி பழம் சாப்பிட்டால் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சலிலிருந்து விடுபடலாம். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் நம் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களின் சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

மேலும், அன்னாச்சிப்பழம் இதய நோய்கள், மாரடைப்பிலிருந்து நம்மை பாதுகாக்கும். இதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு  சக்தியை கொடுக்கும்.

தேவையான பொருட்கள் –

அன்னாச்சிப்பழம்  – 2 கப் (நறுக்கியது)
சர்க்கரை – தேவையான அளவு
எலுமிச்சை பழம் – 1

செய்முறை :

அன்னாசி பழத்தை தோலி நீக்கிவிட்டு சின்னச் சின்னத் துண்டுகளாக நறுக்க வேண்டும்.

பின்னர், அதை ஒரு மிக்ஸியில் தைத் துண்டு துண்டாக நறுக்கி அதனை ஒன்றிரண்டாக அரைக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் அரைத்த அன்னாச்சிப்பழத்துடன் சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

அன்னாச்சிப்பழம் கெட்டியாக ஆரம்பித்து தண்ணீர் வற்றும் வரை நன்றாக கிளற வேண்டும்.

அன்னாச்சிப் பழம் கெட்டியாக ஆரம்பித்து தண்ணீர் நன்றாக வற்றும் வரை வேகவிட வேண்டும்.

பின்னர் அடுப்பை அணைத்து சிறிது, எலுமிச்சை சாற்றை சேர்க்க வேண்டும். ஏனென்றால், சர்க்கரை உறையாமல் இருக்கும்.

இந்த பைனாப்பிள் ஜாம் ஆறிய பிறகு ஒரு பாட்டிலில் போட்டு ப்ரிட்ஜில் வைக்க வேண்டும். இந்த ஜாம்மை சப்பாத்தி, தோசை, பிரட் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.