வீட்டு சுவற்றில் ஓட்டிக்கொண்டிருக்கும் பல்லிகளை விரட்ட 1 மணி நேரம் போதும்!! உடனே ட்ரை பண்ணி பாருங்கள்!!

0
49
#image_title

வீட்டு சுவற்றில் ஓட்டிக்கொண்டிருக்கும் பல்லிகளை விரட்ட 1 மணி நேரம் போதும்!! உடனே ட்ரை பண்ணி பாருங்கள்!!

நம் வீட்டில் அனைத்து இடங்களிலும் பதுங்கி கொண்டு நம்மை பாடாய்ப்படுத்தி வரும் பல்லிகளை விரட்ட இரசாயனம் கலந்த ஸ்ப்ரேயரை பயன்படுத்துவதை விட வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து பல்லி தொல்லையில் இருந்து நிரந்தரமாக தீர்வு கண்டு விடலாம். இந்த முறையினால் நமக்கு எந்தஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

தீர்வு 1:

தேவையான பொருட்கள்:-

*பெரிய வெங்காயம் – பாதி அளவு

*டெட்டால் – 2 தேக்கரண்டி

செய்முறை:-

முதலில் ஓரு பவுல் எடுத்து கொள்ளவும். அதில் 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி டெட்டால் 2 தேக்கரண்டி அளவு எடுத்து அதில் சேர்க்கவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் பெரிய வெங்காயம் சேர்த்து அரைத்து சாறு பிழிந்து எடுத்து கொள்ளவும்.

அந்த சாற்றை டெட்டால் கலந்து வைத்துள்ள தண்ணீரில் சேர்க்கவும். இந்த கலவையை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் பல்லிகள் நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் தெளிக்கவும். இப்படி செய்தால் வீட்டில் பள்ளி தொல்லை இருக்காது.

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

*கரு மிளகு – 1 தேக்கரண்டி

*கிராம்பு – 10

*வெங்காயம் – 1

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க 3 நிமிடங்கள் கொதிக்க விடவும். பிறகு அந்த தண்ணீரை ஒரு பவுலுக்கு மாற்றி கொள்ளவும். அதில் மிளகு மற்றும் கிராம்பு சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

அதன் பின்னர் வெங்காயம் ஒன்று எடுத்து அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு அரைக்க வேண்டும்.

பின்னர் அதை ஒரு பவுலில் வடிகட்டி கொள்ளவும். ஏற்கனவே ஊற வைத்துள்ள மிளகு, இலவங்கம் தண்ணீரை அதில் கலந்து கொள்ளவும். முன்னதாக மிளகு மற்றும் இலவங்கத்தை நீக்கி விட்டு பயன்படுத்த வேண்டும்.

இந்த தண்ணீரை ஒரு ஸ்ப்ரேயர் பாட்டிலில் ஊற்றி வீட்டில் பல்லி நடமாட்டம் இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்து விடவும். இந்த வாசனைகள் பல்லிக்கு அறவே பிடிக்காது என்பதினால் அவை உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி விடும்.

தீர்வு 3:

தேவையான பொருட்கள்:-

*பூண்டு – 1

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜாரில் 1 பூண்டு போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.

இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி பல்லி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தெளித்து விடவும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் உள்ள பல்லிகள் வெளியேறி விடும்.