விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து  தேனியில்  அகிலஇந்திய பார்வர்டு பிளாக் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!

Photo of author

By Rupa

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து  தேனியில்  அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்!

 தேனி மாவட்டம் தேனி பங்களா மேடு பகுதியில்  விலைவாசி  உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய மாநில அரசை கண்டித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெட்ரோல் டீசல் விிலை உயர்வை கண்டித்தும் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் மற்றும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிளை தனியாரிடம் ஒப்படைப்பை கண்டித்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் எழுப்பி  மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோசங்கள் எழுப்பினார்கள்.
இந்நிகழ்வில் தேனி மாவட்ட பொதுச் செயலாளர் எஸ் ஆர் சக்கரவர்த்தி அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் எம்.டி ராமசாமி அவர்கள் மற்றும் மாவட்ட துணைத் தலைவர் நேதாஜி எம் சேகர் அவர்கள் முன்னிலை வகித்தனர்.நன்றி உரை தேனி நகர பொதுச்செயலாளர் வி எம் அன்பழகன் உரையாற்றினார். இதில் ஏராளமான பார்வர்டு  பிளாக்  கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர் .