தினசரி அதிகரிக்க தொடங்கும் டெங்கு காய்ச்சல்!! பெரும் அச்சத்தில் பொதுமக்கள் !!
கேரளாவில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவுவதால் தமிழக எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளின் வளாகத்தில் கொசு உற்பத்தி செய்யாமல் தடுப்பதற்கு ஆய்வு மேற்கொள்ளபட இருக்கின்றது.
இப்பொழுது கேரளா மாநிலத்தில் மட்டும் தினசரி நாள் ஒன்றிற்கு 11,800 என்ற எண்ணிக்கையில் டெங்கு காய்ச்சலால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கேரளாவில் பருவமழை எதிரொளிப்பால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.அதனால் கொசுக்களும் உற்பத்தியாக தொடகியுள்ளது . அந்த வகையில் இந்த கொசுக்கள் மக்களை கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளத்தில் தினசரி நாள் ஒன்றிற்கு 800 முதல் 900 என்ற எண்ணிக்கை வரை மக்கள் மருத்துவ மனைக்கு வருகின்றனர்.இதில் 70 சதவீதம் மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர்.
தற்பொழுது வங்கதேசத்திலும் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி உள்ளத்தால் கடந்த 24 மணி நேரத்தில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் இதுவரை 261 என்ற எண்ணிக்கையில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.இந்த எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை போன்று தலைநகர் டாக்காவில் தினசரி நாள் ஒன்றிற்கு சுமார் 1,131 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 4,869 பேர் தொடர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த ஆண்டு மட்டும் 545416 பேர் டெங்கு காய்ச்சளால் பதிக்கப்பட்டு 44891 பேர் குணமடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனை போன்று இப்பொழுது கர்நாடக மாநிலத்திலும் டெங்கு காய்ச்சல் பரவி வருகின்றது. தற்பொழுது கேரளா உட்பட பெங்களூர் ,ஒடிசா,புவனேஷ்வர்,டெல்லி போன்ற பல்வேறு மாநில மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.