டோனி அந்த ஒரு சாதனையுடன் நிலைத்திருப்பார்

Photo of author

By Parthipan K

இந்திய அணியின் நட்சத்திர வீரரும் மற்றும் இந்திய அணியின் கேப்டனுமான எம்.எஸ். டோனி சுதந்திர தினம் அன்று திடிரென சர்வதேச போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்தார். இது வீரர்களுக்கு மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை தந்தது. எப்போதும் சாதனை கேப்டனாக திகழ்ந்தவர் டோனி.
இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறும்போது கேப்டனாக அதிக போட்டியில் விளையாடியது மற்றும் ஐசிசி-யின் மூன்று டிராபிகளை வென்றது அவரின் மகத்தான சாதனையாகும். மற்ற எந்த கேப்டனும் இந்த சாதனையை முறியடிப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால், எந்த கேப்டனாலும் மூன்று டிராபியை வெல்ல முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஆகவே, டோனி அந்த சாதனையுடன் நிலைத்திருப்பார் என்று கூறினார்.