சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா! இந்த இலைகளில் ஏதேனும் ஒன்றை சாப்பிடுங்க!!

0
130
#image_title

சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க வேண்டுமா! இந்த இலைகளில் ஏதேனும் ஒன்றை சாப்பிடுங்க!!

சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாளிகள் இன்றளவில் அதிகம் மருந்து மாத்திரைகளும், ஊசிகளும் எடுத்துக் கொள்கின்றனர். இவை ஒரு புறம் இருந்தாலும் நாம் உண்ணும் உணவும் மருந்தை சேர்ந்த உணவு பொருளாக இருந்தால் உடலுக்கு மிகவும் நல்லதாகும்.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மருந்து பொருட்கள் உணவு வகைகள் எவ்வாறு பயன்படுகின்றதோ அது போலவே இயற்கையும் இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சில மருந்துப் பொருட்களை தந்துள்ளது. அது வேறு எதுவும் இல்லை. மருந்துப் பொருட்களாக பயன்படும் சில இலைகள் தான். இந்த இலைகளில் ஏதேனும் ஒன்றை தினமும் நாம் சாப்பிடும் பொழுது உடலில் உள்ள சர்க்கரை நோயை நாம் கட்டுப்படுத்தலாம்.

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் இலைகள்…

* பாகற்காய் இலை…

பாகற்காய் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் மருந்து என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல பாகற்காய் செடியில் உள்ள இலைகள் அதாவது பாகற்காய் இலைகள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும் என்பது எத்தனை பேருக்கு தெரியும். இந்த பாகற்காய் இலைகளை நாம் உணவில் அல்லது மூலிகை உருண்டை போல சாப்பிட்டு லருவதன் மூலமாக இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நாம் கட்டுப்படுத்தலாம்.

* கறிவேப்பிலை…

இந்திய சமையலில் தவிர்க்க முடியாத முதன்மையான பொருளாக பயன்படும் கறிவேப்பிலையானது உடலில் உள்ள சரக்கரை நோயை கட்டுப்படுத்துவதில் மிகவும் தொடர்புடையதாக இருக்கின்றது. நாம் தினமும் கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கும். இதன் மூலம் இரத்தச் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

* வெந்தய இலைகள்…

மெத்தி இலைகள் என்று அழைக்கப்படும் வெந்து இலைகளையும் நாம் சரக்கரையை கட்டுப்படுத்த சாப்பிட்டு வரலாம். இந்த வெந்தய இலைகளில் கரையக் கூடிய நார்ச்சத்துக்கள், சேர்மங்கள் ஆகியவை உள்ளது. இவை உடலில் இன்சுலின் அளவை அதிகரித்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

* கொத்தமல்லி இலைகள்…

கறிவேப்பிலை போலவே கொத்தமல்லி இலைகளும் இந்திய சமையலில் முக்கியமான இடத்தை பிடித்திருக்கின்றது. கொத்தமல்லி இலைகளில் ஆக்சிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது. இவை உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை சீராக்கி விடுகின்றது.

* வேப்பிலை…

வேப்ப மரத்தின் அனைத்து பாகங்களும் ஒவ்வொரு விதமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இதில் வேப்பிலை பலவித பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுத்தலாம். இந்த வேப்பிலையை தினமும் ஒரு இலை சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

* ஓமவள்ளி இலை…

ஓடவள்ளி இலைகளும் மருந்தாக பயன்படுகிற இலைகளுள் ஒன்று. இந்த இலைகளை நாம் சளி, இருமல், தலைவலி போன்ற பிரச்சனைகளை விரைவில் குணப்படுத்த பயன்படுத்தலாம். இந்திலைகளில் ஆன்டிஆக்சிடன்ட் சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றது. எனவே இந்த இலையை நாம் தினமும் ஒன்று என்று சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

* துளசி இலை…

இருமல் விரைந்து குணப்படுத்தும் மருந்து இலைகளுள் துளசி முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. இருமல் அதிகமாக இருக்கும் பொழுது துளசியை இடித்து சாறு பிழிந்து குடுத்தால் இருமல் குணமாகும். அதே போல துளசி இலையை நாம் சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும்.

Previous articleகல்வி தகுதி: டிப்ளமோ! BSNL நிறுவனத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு!! விண்ணப்பம் செய்ய நவம்பர் 30 இறுதி நாள்!!
Next articleநேபாளத்தில் டிக்டாக் செயலிக்குத் தடை! சோகத்தில் பயனாளிகள்!!