எரிபொருள் கொண்டு வந்த சென்ற கப்பல் தீ விபத்தா?

0
136

குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு எரிபொருள் கொண்டு வந்த சென்ற கப்பல், இலங்கை அம்பாறை சங்கமன்கந்தை பகுதியின் கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் வந்தபோது நடுக்கடலில் தீப்பிடித்தது. எஞ்சின் அறையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், பிரதான எரிபொருள் டாங்கு வரை தீ பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலில் 2 மில்லியன் பேரல்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் டன் அளவுக்கு கச்சா எண்ணெய் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கப்பல், மத்திய அமெரிக்க நாடான பனாமாவுக்கு சொந்தமானது என்றும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்காக பெட்ரோலிய பொருட்களை ஏற்றி வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்தியக் கடலோரக் காவல்படை தங்கள் டுவிட்டர் பக்கத்தில் டேங்கர்களின் பின்புறத்தில் 2மீட்டர் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இலங்கைக் கடற்படை மீட்புக்காக 2 கப்பல்களை ஈடுபடுத்தியுள்ளது. கப்பலின் சரக்குப் பகுதிக்கு தீ பரவவில்லை. இலங்கையிலிருந்து 65 கிமீ தொலைவில் நியூடைமண்ட் தீப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Previous articleசீன அதிபர் ஜின்பிங்கின் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு
Next articleஇன்றைய ராசி பலன் 05-09-2020 Today Rasi Palan 05-09-2020