மீன் சாப்பிடும் பொழுது தொண்டையில் முள் சிக்கிவிட்டதா!!? அதை சரி செய்ய மூன்று டிப்ஸ்!!!

0
98
#image_title

மீன் சாப்பிடும் பொழுது தொண்டையில் முள் சிக்கிவிட்டதா!!? அதை சரி செய்ய மூன்று டிப்ஸ்!!!

மீன் சாப்பிடும் பொழுது சிலருக்கு முள்ளானது தொண்டையில் சிக்குவது உண்டு. அந்த முள்ளை எடுக்க சில எளிமையான வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மீனை வளர்ப்பதற்கு இருக்கும் ஆசையை விட அதை வறுத்து சாப்பிட வேண்டும் என்ற ஆசைதான் பெரும்பாலான மக்களிடையே காணப்படுகின்றது. ஆனால் மீனை சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கும் கண்களுக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றது என்று கூறப்படுகிறது.

மீனை சமைத்து சாப்பிடும் பொழுது தொண்டையில் மீனின் முள் சிக்கிக் கொள்ளும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மீன் முள்ளானது தொண்டையில் சிக்கும். அவ்வாறு மீன் முள் தொண்டையில் சிக்கிக் கொண்டால் தெண்டையில் வலி ஏற்படும்.

இருமல் ஏற்படும் பொழுது இரத்தம் ஏற்படும். தொண்டேயில் அரிப்பு ஏற்படும். மீன் முள் தொண்டையில் சிக்கி இருக்கும் பொழுது தண்ணீர் குடிக்க முடியாது. கழுத்தின் அடிப்பகுதியானது தடித்து விடும்.

மீன் சாப்பிடும் பொழுது மீன்முள் சிக்கிக் கொண்டால் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் உணவுக் குழாய்க்கு சென்று உணவுக் குழாயை கிழித்துவிடும்.

மீன் முள் தொண்டையில் சிக்கிக் கொண்டால் உடனே வெள்ளை சாப்பாட்டை சாப்பிட வேண்டும் அவ்வாறு சாப்பிட்டால் தொண்டையில் சிக்கி இருக்கும் மீன் முள் நீங்கிவிடும். இந்த வழிமுறையானது காலம்காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றது. இதைத் தவிர மீன் முள் தொண்டையில் சிக்கிக் கொண்டால் நீக்கும் வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.

தொண்டயில் சிக்கிய மீன் முள்ளை நீக்கும் வழிமுறைகள்!…

* தொண்டையில் மீன் முள் சிக்கிக் கொண்டால் ஒரு டம்ளர் தண்ணீரில் உப்பு போட்டு குடிக்க வேண்டும்.

* தொண்டயில் மீன் முள் சிக்கிக் கொண்டால் அதை நீக்க வாழைப்பழத்தை மெதுவாக பொறுமையாக சாப்பிட வேண்டும்.

* பெரிய பிரட் துண்டை எடுத்து அதை தண்ணீரில் முக்கி வேகமாக சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்தால் தொண்டையில் சிக்கிய மீன் முள் வயிற்றினுள் சென்று விடும்.