நாட்டாமை படத்தில் மிக்சர் சாப்பிடும் இவர் யார் என்று தெரியுமா?

0
335
#image_title

1994 ஆம் ஆண்டு நாட்டாமை படம் வெளிவந்தது. இதில் சரத்குமார், விஜயகுமார் குஷ்பூ, மீனா ஆகியோர் நடித்திருந்தார்கள் செந்தில், கவுண்டமணி உட்பட இந்த படத்தில் அவர்களது காமெடி நன்றாகவே இருந்தது என்று சொல்லலாம்.

 

அதிலும் போகும் இடமெல்லாம் கவுண்டமணியே கிண்டல் செய்யும் செந்தில் ஆகட்டும் . செந்திலை ‘தகப்பா’ என்று சொல்லிக் கொண்டு காமெடியை கலக்கும் கவுண்டமணி ஆகட்டும் இந்த படத்தில் அவர்களது இருவரின் காம்போ நன்றாகவே இருந்தது.

 

அப்படி அந்த படத்தில் மிக்சர் சாப்பிட்டு பிரபலமானவர் ஆனவர் இவர். இவருக்கு இந்த படத்தில் ஒரு வசனம் கூட கிடையாது. வெறும் மிக்ஸரை சாப்பிட வேண்டும் அவ்வளவுதான். ஆனால் இதை வைத்து எவ்வளவு பிரபலமானார் தெரியுமா. இவர் யார் என்று தானே கேட்கிறீர்கள் வாருங்கள் பார்ப்போம்.

 

இவர் படத்தில் லைட் மேன். இவரது வேலை சொல்லும் பொழுது லைட்டை ஆன் செய்ய வேண்டும். சொல்லும் பொழுது லைட்டை ஆப் செய்ய வேண்டும் அவ்வளவுதான்.

 

அப்படி இந்த மிக்சர் சாப்பிடும் கதாபாத்திரத்திற்கு ஒரு ஆளை தேர்வு செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தாராம் இயக்குனர். இந்த படத்தில் அந்த பெண்ணிற்கு அம்மாவாக வருபவர் மிகவும் கலையாக இருப்பார். மிகவும் வெள்ளையாக இருப்பார். அதனால் அவருக்கு ஏற்றவாறு கணவர் இருக்க வேண்டும் என்று நினைத்தாராம் இயக்குனர்.

 

அப்பொழுது செட்டில் இவர் பார்ப்பதற்கு கொஞ்சம் வெள்ளையாக எப்பொழுதும் பட்டை போட்டுக் கொண்டு இருப்பாராம். அதனால் இவரிடம் சென்று உங்களுக்கு இந்த லைட்டை ஆன் செய்வதற்கு அசிஸ்டன்ட் யாராவது இருக்கிறார்களா? என்று, கேட்டுவிட்டு நீங்கள் ஒரு காட்சி நடிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.

 

எனக்கு நடிக்க தெரியாது என்று சொன்னவுடன், இது வெறும் மிக்ஸர் சாப்பிடும் வேலை மட்டுமே உங்களுக்கு எந்த ஒரு வசனமும் கிடையாது. உட்கார்ந்து மிக்ஸ்ட்ரை சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் அவ்வளவுதான், என்று சொல்லி இருக்கிறார்கள் அவரும் சரி என்று சொல்லி இருக்கிறார்.

 

அவ்வளவுதான் அந்த காட்சி எடுக்கப்பட்டது. அந்த காட்சி எடுத்து முடிப்பதற்குள் அவர் ஒன்றரை கிலோ மிக்சரை சாப்பிட்டு இருக்கிறாராம்.

 

இப்பொழுது பார்க்கின் வெளியே அருகம்புல் ஜூஸ் கற்றாழை ஜூஸ் என விற்று கொண்டிருக்கிறார்.

 

இப்பொழுது லைட் மேன் வேலையை அவரது மகன் செய்து கொண்டிருக்கிறாராம்.

author avatar
Kowsalya