சர்க்கரை நோயை அலற விடும் “வெந்தய காபி” – தயார் செய்வது எப்படி?
உலக நாடுகளை ஒப்பிடும் பொழுது இந்தியாவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த சர்க்கரை நோய் பரம்பரை பரம்பரையாக வரக் கூடியவையாகவும், மாறி வரும் உணவுமுறை பழக்கத்தாலும் வரக் கூடிய ஒன்றாக இருக்கிறது. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம்.
இந்த சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியவில்லை என்றாலும் கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். இதற்கு மருந்து மாத்திரை இல்லா இயற்கை தீர்வு கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
1)வெந்தயம்
2)காபி தூள்
3)பால்
செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு கருப்பாகும் வரை வறுத்துக் கொள்ளவும். இதை ஆறவிட்டு பொடி செய்து கொள்ளவும்.
இந்த வெந்தயப் பொடியை காபி தூளுடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.
வெந்தய காபி போடும் முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் சேர்க்கவும். பால் சூடாகி ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
பிறகு ஒரு கிளாஸில் வெந்தயத் தூள் சேர்த்து காபி பவுடர் 1/2 தேக்கரண்டி அளவு போட்டு கொள்ளவும். அடுத்து காய்ச்சிய பாலை ஊற்றி கலக்கி சூடாக குடிக்கவும். இந்த வெந்தய காபி இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.