பள்ளியில் அடிதடி தகராறு! நிர்வாகம் எடுத்த முடிவு!

Photo of author

By Parthipan K

பள்ளியில் அடிதடி தகராறு! நிர்வாகம் எடுத்த முடிவு!

Parthipan K

Updated on:

Dispute at school! Management decision!

பள்ளியில் அடிதடி தகராறு! நிர்வாகம் எடுத்த முடிவு!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் சிலர் தனக்கென்று கூட்டம் ஏற்படுத்திக்கொண்டு அவ்வப்போது மற்றவர்களிடம் மோதல் சம்பவங்களில்  ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு மாணவர்கள் தாக்கப்பட்டனர். காயம் அடைந்த மாணவர்கள்  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

மேலும்  இது குறித்து  அறிந்து பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மோதல் சம்பவம் தொடர்பாக நகர் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பெயரில் பள்ளிக்கு வந்த நாகர்கோவில் போலீசார் இந்த பிரச்சனை தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களையும் அழைத்து பேசினார்கள்.

மேலும் பள்ளி தலைமை ஆசிரியை மேரி அல்போன்சால் சங்கத் தலைவர் மேகலிங்கம் மற்றும் மேலாண்மை குழுவினரும் பெற்றோர்கள் இடையிலும் விசாரணை நடத்தினார்கள். விசாரணை முடிவில் தகராறில் ஈடுபட்ட 12 மாணவர்கள் ஒரு மாத காலத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மேலும் அந்த சம்பவத்தை தலைமை தாங்கி நடத்திய ஒரு மாணவனுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. சஸ்பெண்டு செய்யப்பட்ட மாணவர்கள் பள்ளி மற்றும் பள்ளிக்கு சுற்றுப்புறங்களில் நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும் இந்த மோதல் குறித்து சமூக ஆர்வலர் போலீசாரிடம் கூறுகையில் பள்ளியின் அருகே போதைப் பொருட்கள் விற்பனை நடக்கிறது இதனால் மாணவ மாணவிகள் தடம் மாறி செல்கின்றனர் எனவும், அரசு பள்ளியின் அருகே உள்ள கோவில் மைதானம் மற்றும் தெருக்களில் பள்ளிக்கூடம் மாணவர்கள் மட்டுமல்லாமல் வெளியே உள்ள இளைஞர்களும் மாறி மாறி  நாளுக்கு நாள் அட்டகாசம் செய்கின்றனர் எனவும் தெரிவித்தனர்.

ஆகையால் இந்த பகுதிகளில் காலை மாலை என இரு வேலைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.