கொடநாடு கொலை கொள்ளை வழக்கு! தனிப்படை அமைத்து சிபிசிஐடி ஆணை!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு! தனிப்படை அமைத்து சிபிசிஐடி ஆணை!

கடந்த 2017 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருக்கின்ற கொடநாடு எஸ்டேட்டில் அதன் காவலாளி கொலை செய்யப்பட்டு, பல பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கொள்ளையடித்து செல்லப்பட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை உதகை நீதிமன்றத்தில் நடந்து வருகின்ற நிலையில், சிபிசிஐடியின் காவல்துறை கண்காணிப்பாளர் மாதவன் தலைமையில் 49 பேர் கொண்ட தனிப்படை ஒன்றை தமிழக அரசு அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான ஆணை சென்ற வாரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விசாரணை … Read more

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம்! நாகர்கோவிலில் காவல்துறையினர் அதிரடி விசாரணை!

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம்! நாகர்கோவிலில் காவல்துறையினர் அதிரடி விசாரணை!

கர்நாடக மாநிலம் மங்களூரில் கடந்த 19ஆம் தேதி குக்கர் குண்டுவெடிப்பு குறித்து முகமது ஷாரிக் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை மற்றும் உளவுப் பிரிவு காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். குக்கர் வெடிப்பில் ஈடுபட்ட நபரின் செல்போன் மற்றும் டைரி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் தமிழகத்தில் மதுரை, கோவை, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு அவர் சென்று வந்தது தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில், மங்களூரூவிலிருந்து வந்த … Read more

முதல்வர் வாழ்த்து சொல்வதில் ஏன் பாரபட்சம் காட்டுகிறார்! தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

முதல்வர் வாழ்த்து சொல்வதில் ஏன் பாரபட்சம் காட்டுகிறார்! தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

மதச்சார்பற்ற தன்மையை தமிழக முதலமைச்சரும் கடைபிடிக்க வேண்டும் என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் கோவையில் தெரிவித்திருப்பதாவது, இணையதள ரம்மி சூதாட்டம் நடைபெற கூடாது என்பது எல்லோருக்கும் பொதுவான கருத்தாக இருக்கிறது. ஏன் தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்திருக்கிறார் என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். என்னிடமும் சில சட்ட முன் வடிவுகள் நிலுவையில் இருக்கின்றன. மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறதா? என்பதை பார்த்து தான் கையெழுத்து போட வேண்டும். ஆளுநருக்கு கையெழுத்து … Read more

தாயின் திடீர் மரணத்தால் விரக்தி அடைந்த மகன் விஷம் அருந்தி தற்கொலை! திருப்பூர் அருகே சோகம்!

தாயின் திடீர் மரணத்தால் விரக்தி அடைந்த மகன் விஷம் அருந்தி தற்கொலை! திருப்பூர் அருகே சோகம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்து இருக்கின்ற கரைப்புதூர் காளிநாதன் பாளையம் கிராமத்தை சார்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மனைவி . அங்காத்தாள் இந்த தம்பதியரின் மகன் 25 வயதான ஜெகதீஷ் இவர் ஒரு தொழிலாளி என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ஜெகதீஷின் தாயார் கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக, உயிரிழந்தார். தன்னுடைய தாயின் மீது அதீத அன்பும், பாசமும் கொண்டிருந்த ஜெகதீஷ் அவருடைய மறைவின் காரணமாக, மிகுந்த வேதனையுடன் இருந்து வந்ததாக தெரிகிறது. ஜெகதீசுக்கு அவருடைய உறவினர்கள் … Read more

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம்! சிம் கார்டு வாங்க உதவி புரிந்த நபரிடம் 60 மணி நேரம் தொடர் விசாரணை!

மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம்! சிம் கார்டு வாங்க உதவி புரிந்த நபரிடம் 60 மணி நேரம் தொடர் விசாரணை!

கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றன. இந்த வழக்கின் குற்றவாளியாக கருதப்படும் முகமது ஷாரிக் தமிழகத்தில் கோவை, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்கள் தாங்கி சென்றது காவல்துறையினரின் விசாரணை தெரிய வந்திருக்கிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இவர் தங்கி சென்ற கோவை மாவட்டத்தில்தான் சமீபத்தில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. அந்த கார்வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபர் ஒரு மிகப்பெரிய … Read more

மங்களூர் குண்டு வெடிப்புக்கும் கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? காவல்துறையினர் அதிரடி விசாரணை!

மங்களூர் குண்டு வெடிப்புக்கும் கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? காவல்துறையினர் அதிரடி விசாரணை!

மங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்தை நடத்திய முகமது ஷாரிக் கோவை தனியார் விடுதியில் கௌரி அருண்குமார் என்ற பெயரில் தங்கி இருந்ததும், போலியான முகவரியை வழங்கி இருப்பதும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது அது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றன. இந்த வழக்கின் குற்றவாளியாக கருதப்படும் முகமது சாரிக் தமிழகத்தில் கோவை, நாகர்கோவில், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் சில தினங்கள் தங்கி அதன் பிறகு மங்களூருக்கு … Read more

மக்களிடம் 110 கோடி அபேஸ்!! காவல்துறைக்கே சவால் விட்ட பலே திருடன்!!

மக்களிடம் 110 கோடி அபேஸ்!! காவல்துறைக்கே சவால் விட்ட பலே திருடன்!!

மக்களிடம் 110 கோடி அபேஸ்!! காவல்துறைக்கே சவால் விட்ட பலே திருடன்!! கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேலக்காரவை சஜீவ் கருண் என்பவர் பொள்ளாச்சி கோட்டம்பட்டி பகுதியில் தனியார் நிறுவனத்தை ஒன்று தொடங்கினார்.இவர் தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் ஆலையை நடத்தி வருவதாகவும்,தனது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு லாபத்தில் பங்கு தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். இவரின் ஆசை வார்த்தையை நம்பி சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த பரமசிவன் என்பவர் அந்நிறுவனத்தில் 96 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். சில … Read more

ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு! சென்னையில் 4 பேர்களின் வீடுகளில் அதிரடி சோதனை!

ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு! சென்னையில் 4 பேர்களின் வீடுகளில் அதிரடி சோதனை!

கடந்த மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் பகுதியில் இருக்கின்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் திடீரென்று வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அந்த காரில் இருந்த ஒரு நபர் உயிரிழந்தார். ஆனால் அந்த கார் வெடிப்பு விபத்தில் உயிரிழந்த நபர் தீவிரவாதிகளின் பட்டியலில் இருப்பதாகவும், அவரை தேசிய புலனாய்வு முகமை கண்காணித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவரைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மத்திய உளவுத்துறை தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை செய்தும் … Read more

ஆளுநர்களாகிய நாங்கள் அனைவரும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட தான் நடந்து வருகிறோம்! ஆனால்….!

ஆளுநர்களாகிய நாங்கள் அனைவரும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்ட தான் நடந்து வருகிறோம்! ஆனால்....!

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் மாநிலத்தில் ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டால் அவர்களுடைய வேலை என்பது மிகவும் குறைவு. அதாவது மாநில சட்டசபையில் ஏதாவது ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அதற்கு ஒப்புதல் வழங்குவது, குடியரசு மற்றும் சுதந்திர தினங்களின் போது கொடி ஏற்றுவது இதுபோன்ற விஷயங்களோடு ஆளுநர்களின் வேலை முடிவடைந்து விடும். ஆனால் தற்போது ஆளுநர்கள் தன்னிச்சையாக சில செயல்பாடுகளை முன்னெடுப்பதால் இது மாநில அரசுகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதாக … Read more

“களை எடுக்க ஏக்கருக்கு 8 ரூபாய் மட்டுமே ” அசத்தும் அக்ரி ஈசி இயந்திரம்!

"களை எடுக்க ஏக்கருக்கு 8 ரூபாய் மட்டுமே " அசத்தும் அக்ரி ஈசி இயந்திரம்!

“களை எடுக்க ஏக்கருக்கு 8 ரூபாய் மட்டுமே” அசத்தும் அக்ரி ஈசி இயந்திரம்! வேளாண் பணிகளை எளிதாக்கும் வகையில் கோவையில் அக்ரி ஈசி எனும் விவசாய இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய நவீன காலகட்டத்தில் நிலங்களில் இறங்கி உழவுப் பணிகளை மேற்கொள்ள போதுமான ஆட்கள் கிடைப்பதில்லை. அதனை ஈடுகட்டும் வகையில் கோயம்புத்தூரில் முழுவதும் பேக்டரியல் இயங்கும் அக்ரி ஈஸி எனும் விவசாய இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உழவு பணிகளுக்கு டிராக்டர் பயன்படுத்தப்படுவது போல களையெடுப்பதற்கு இந்த இயந்திரத்தை … Read more