ரேஷன் அட்டை தாரர்களுக்கு ‘தீபாவளி போனஸ்’! என்னென்ன வழங்கப்படும் என்பது குறித்த விவரம் இதோ!

0
129
#image_title

ரேஷன் அட்டை தாரர்களுக்கு ‘தீபாவளி போனஸ்’! என்னென்ன வழங்கப்படும் என்பது குறித்த விவரம் இதோ!

நாட்டில் விலைவாசி ஏற்றத்துடனே இருப்பதால் சாமானிய மக்கள் வாழ்க்கையை நகர்த்த ஒவ்வொரு நாளும் போராடும் சூழலில் தள்ளப்பட்டு விட்டனர்.சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் நியாயவிலை கடை பொருட்கள் தான்.அதில் அரிசி,கோதுமை உள்ளிட்டவை இலவசமாகவும் எண்ணெய்,சர்க்கரை,பருப்பு உள்ளிட்டபொருட்கள் குறைந்த விலைகளிலும் கிடைப்பதால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து செயல்படுத்தி வரும் இந்த திட்டம் ஏழை,எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதத்தில் இருக்கிறது.கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது 1 கிலோ அரிசி 1 ரூபாய் என்று வழங்கப்பட்டது.அதனை தொடர்ந்து செல்வி ஜெ.ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னர் ரேஷன் அரிசி இலவசமாக வழங்கப்பட்டது.தற்பொழுது வரை இந்த இலவச அரசி வழங்கும் திட்டம் தமிழக அரசால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ரேஷன் அட்டைகளில் PHH,NPHH,PHH – AAY,NPHH – S மற்றும் NPHH – NC என்று 5 வகைகள் இருக்கிறது.PHH,NPHH,PHH – AAY ஆகிய ரேஷன் அட்டைகளுக்கு அரிசி,சர்க்கரை,பாமாயில், மண்ணெண்ணெய்,துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.NPHH – S அட்டை வைத்திருப்பவர்களுக்கு சர்க்கரை மட்டும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.NPHH – NC வகை அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் எதுவும் விநியோகம் செய்யப்படமாட்டாது.
கடந்த 2016 வரை நியவில்லை பொருட்கள் வாங்க சிறு புத்தகம் அமைப்பில் பயன்படுத்தப்பட்டு வந்தது.இவை விரைவில் கிழிந்து விடுவதால் ரேஷன் பொருட்களை வாங்க மக்கள் சிரமப்பட்டு வந்தனர்.இதனை தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்மார்ட் ரேஷன் கார்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நியாயவிலை கடைகளில் அரிசி,கோதுமை இலவசமாகவும்,சர்க்கரை கிலோ 13 ரூபாய்க்கும், துவரம் பருப்பு கிலோ 30 ரூபாய்க்கும்,பாமாயில் லிட்டர் ரூ.25க்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.பண்டிகை காலங்களில் ரேஷன் கடை மூலம் பணம்,பொருட்கள் இலவசமாக வழங்கப்படுவது வழக்கம்.

அதேபோல் வரவுள்ள தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு இலவசமாக 1 கிலோ துவரம் பருப்பு மற்றும் 1 லிட்டர் பாமாயில் இலவமாக வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.இந்த எப்பொழுதும் வழங்கப்படும் பொருட்களுடன் இந்த 2 பொருட்கள் அக்டோபர் மற்றும் நவம்பர் என்று 2 மாதங்களுக்கு வழங்க அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது என்ற தகவல் வெளியாகி இருபதால் ஏழை மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Previous articleஉடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும்!!! தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகர் கமல்ஹாசன் வரவேற்பு!!!
Next articleமகளிர் உரிமைத் தொகை.. 3 நாட்களாக ‘ERROR’.. அவதிப்பட்டு வரும் பெண்கள்! கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசு!