தமிழக அரசியலில் பரபரப்பு… பிரபல கட்சியின் முக்கிய நிர்வாகி திடீரென மருத்துவமனையில் அனுமதி…!

Photo of author

By CineDesk

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடிய கொரோனா வைரஸ் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் படிப்படியாக குறைந்து, 2021ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கோவேக்சின், கோவிட்ஷீல்டு என உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் கொரோனா தடுப்பூசிகளை எல்லாம் தாண்டும் விதமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதுவரை பொதுமக்களிடையே தீவிரமாக பரவி வந்த தொற்று, தற்போது தேர்தல் களத்தில் தன்னுடைய வேட்டையை ஆரம்பித்துள்ளது அரசியல் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

LK Sudhish

 

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் பிரச்சாரம், பொதுக்கூட்டம், மாநாடு, வாக்கு சேகரிப்பு என அரசியல் கட்சி தலைவர்கள் தீயாய் வேலை செய்து வருகின்றனர். இதுபோன்ற சமயங்களில் ஆயிரக்கணக்கில் பொது மக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எல்.கே.சுதீஷுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கட்சியின் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அனைத்து முக்கிய விஷயங்களிலும் முன்னிருந்த எல்.கே.சுதீஷ், தேர்தல் பரப்புரைக்கு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டது தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.