ஏப்ரல் 10ல் திமுக, அதிமுக பங்காளி கட்சிகள் சேரும் – அண்ணாமலை!

0
251
#image_title

ஏப்ரல் 10ல் திமுக, அதிமுக பங்காளி கட்சிகள் சேரும் – அண்ணாமலை!

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் என்னை தோற்கடிக்க அதிமுக திமுக இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடுவார்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மும்முனை போட்டி நிலவுகிறது.

திமுக மற்றும் அதிமுக, பாஜக கட்சிகள் பிற கட்சிகளுடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்திக்க உள்ளது.

கோவையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பத்து ஆண்டுகள் அமைச்சராக இருந்து மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பது தான் வளர்ச்சியை? ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொள்ளை அடித்தவர்கள் என்னை விமர்சிக்க கூடாது என எடப்பாடி பழனிச்சாமியை சாடினார்.

மேலும், ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சிகளாக இருக்கும் திமுக மற்றும் அதிமுக பங்காளி கட்சிகள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவையும் என்னையும் தோற்கடிக்க வருகின்ற ஏப்ரல் 10 தேதி ஒன்று சேர்ந்து போராடும் என கூறியுள்ளார்.

Previous articleபயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது சட்டநடவடிக்கை பாயும்!
Next articleKerala Recipe: கேரளா ஸ்டைலில் ‘முட்டை 65’ – கமகம சுவையில் செய்வது எப்படி?