திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் மீது குண்டு வீச்சு!! தன் வளர்ச்சியை பிடிக்காதவரின் சதி என்று உருக்கம்!!
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எம்.எல்.ஏ. ஐயப்பன் ஆவார்.
இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். அங்கு ஒரு மர்ம நபர் இவர் மீது பெட்ரோல் குண்டை வீசிச் சென்றார்.
ஆனால் இவருக்கு எந்தக் காயமும் ஏற்படாமல் தப்பி விட்டார். இதுகுறித்து காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த ஆதரவாளர்கள் அனைவரும் திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் வீட்டின் முன்பு குவிந்தனர். இது தொடர்பாக தொண்டர்களிடம் பேசிய எம்.எல்.ஏ. ஐயப்பன், என் மீது குண்டை வீசிய நபர் வெறும் கருவி தான்.
அந்தக் கருவியை அனுப்பி வைத்தது யார் என்று தான் கண்டுபிடிக்க வேண்டும். மேலும், நான் எங்கே சென்றாலும் என் வாகனத்திற்கு பின்னால் அடியாட்களை கூட்டி செல்ல மாட்டேன்.
நான் யாருக்கும் எந்த தீங்கும் நினைத்ததில்லை, ஆகையால் தனியாகத்தான் போவேன். எவராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது எனவே நீங்கள் அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று தொண்டர்களிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும், நான் யாருக்கும் எந்த துரோகமும் இழைத்ததில்லை என் வளர்ச்சி பிடிக்காத யாரோ ஒருவர் தான் இந்த காரியத்தை செய்திருக்கிறார்கள் என்று உருக்கமுடன் எம்.எல்.ஏ. ஐயப்பன் தொண்டர்களிடம் பேசினார்.
இதனையடுத்து முதல்வர் தலைமையில் சட்ட மன்ற கூட்டம் நடைபெறுகிறது. இதில் இந்த சம்பவம் குறித்து முதல்வர் கண்டிப்பாக கேட்பார் என்பதனால் கடலூர் மாவட்ட காவல் துறையினர் இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.