மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது – ஸ்டாலின்

0
177
மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - ஸ்டாலின்
மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது - ஸ்டாலின்

மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது.

வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு முறைகளை முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்பளித்த உச்ச நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததுடன், 2011 மக்கள்தொகை அடிப்படையில் தேர்தலை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர். “உச்ச நீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு சம்மட்டி அடி என்றால் அதிமுகவுக்கு அது மரண அடி.” என்றார்.

தேர்தலை நிறுத்த வேண்டும் என்று திமுக எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என கூறிய ஸ்டாலின், மக்களை சந்திக்க திமுக என்றுமே அஞ்சியதில்லை என்றார். நாங்கள் ஓடி ஒளியவும் இல்லை. மக்களை சந்திக்க திமுக எப்போதும் தயாராக உள்ளது. தற்போதாவது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றி முறையாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுதியுள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், வார்டு வரையறை, இட ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பாணைக்கு தடை விதிக்க வேண்டும் என திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Previous articleமகாகவி பாரதியாரின் 138 வது பிறந்தநாள் – தமிழக அரசு மரியாதை
Next articleவிண்வெளியில் நாசா ஆரம்பிக்கும் ஹோட்டல்: புதிய தகவல்