விண்வெளியில் நாசா ஆரம்பிக்கும் ஹோட்டல்: புதிய தகவல்

0
86

விண்வெளியில் நாசா ஆரம்பிக்கும் ஹோட்டல்: புதிய தகவல்

விண்வெளியில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதில் பெரும் புரட்சி செய்து வரும் அமெரிக்காவின் நாசா தற்போது புதிய முயற்சியாக விண்வெளியில் ரோபோ ஹோட்டல் என்ற ஹோட்டலை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஹோட்டல் உணவு வழங்கும் ஹோட்டல் அல்ல என்பதும் விண்வெளியில் உள்ள பாதுகாப்பு தன்மைகளை கண்காணிப்பது இதன் நோக்கம் என்றும் நாசா தெரிவித்துள்ளது

விண்வெளியில் ஒரு பாதுகாப்பு சேமிப்பு அலமாரி அமைக்கப்பட உள்ளதாகவும், இந்த அலமாரியை கண்காணிக்க ரோபோ ஹோட்டல் உருவாக்கப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது. இந்த ஹோட்டலை கண்காணிக்க ஏற்கனவே ஒரு ரோபோ தயார் நிலையில் உள்ளதாகவும், தற்போது இன்னொரு ரோபோ உருவாக்கப்பட்டு வருவதாகவும், இந்த இரண்டு ரோப்போக்களும் விண்வெளி மையத்தில் லீக் ஏதாவது ஏற்படுகிறதா என்பதை கண்டுபிடிக்கும் என்றும் நாசா கூறியுள்ளது

விண்வெளியில் அடிக்கடி நிகழும் அமோனியா வாயு வெளியேற்றத்தை அறிந்து அதனை உடனடியாக இந்த ரோபோக்கள் சரி செய்யும் என்றும், சர்வதேச விண்வெளி மையம் அருகே அமையவிருக்கும் இந்த ரோபோ ஹோட்டல் விண்வெளியில் நாள் பூமிக்கு ஏற்படும் ஆபத்துகளை தடுக்கவும் செய்யும். குறிப்பாக விண்வெளியில் உலவும் சிறு மற்றும் பெரிய விண்கற்களில் இருந்து பூமியை காப்பாற்ற இந்த ரோபோக்கள் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

author avatar
CineDesk