மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது- எல்.முருகன் விமர்சனம்!

0
236
#image_title

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்கிறது- எல்.முருகன் விமர்சனம்!

கடந்த மாதம் ஆளும் திமுக அரசால் வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில் பெரும்பான்மையானவை ஏற்கனவே மத்திய அரசால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டமாகவே இருந்தது.

இதனை பற்றி பாஜக மற்றும் பிற அரசியல் கட்சிகள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றனர், ஆனால் திமுகவோ மாநில அரசின் திட்டங்களைதான் மத்திய அரசு காஃபி அடிக்கிறது என ஒப்பேற்றி வருகின்றனர்.

மத்திய அரசின் பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் ஜல் ஜீவன் திட்டம் உள்ளிட்டவைக்கு 50 விழுக்காடு நிதி மாநில அரசே வழங்குகிறது என குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் தற்போது இதற்கு பதிலளிக்கும் விதமாக, பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பயனர்களுக்கு நேரடியாக2,7000 வழங்கப்படுகிறது, 22 கோடி பேர் ஜல் ஜீவன்திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர் மத்திய அரசின் இவை அனைத்தும் மத்திய அரசின் திட்டங்களே என கூறியுள்ளார்.

மேலும் ஸ்டிக்கர் ஒட்டுவதில் பெயர் போனது திராவிட முன்னேற்ற கழக ஆட்சி என்பது அனைவரும் அறிந்ததே, மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி கொள்கிறது என மத்திய இணையமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார்.

Previous articleதொடர்ந்து நான்காவது முறையாக களம் காணும் பாலபாரதி? வெற்றி கனி கிட்டுமா?
Next articleதுப்பாக்கி குண்டு பாய்ந்தும் பயணிகள் உயிரை காப்பாற்ற 30கி.மீ.பேருந்தை இயக்கிய ஓட்டுநர்-காவல்துறை பாராட்டு!!