திசை திருப்புவதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள்! அண்ணாமலை விமர்சனம் 

0
262
#image_title

திசை திருப்புவதில் திமுகவினர் கைதேர்ந்தவர்கள்! அண்ணாமலை விமர்சனம்

திசை திருப்புதலில் வல்லவர்கள் திமுகவினர் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

திமுக ஆட்சியில், சமூகத்தைச் சேர்ந்த சகோதர, சகோதரிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பி வருகிறோம். திமுக நிர்வாகி ஒருவர், கோவிலுக்குள் செல்ல விடாமல் சமூக இளைஞர் ஒருவரை அவமானப்படுத்தினார். வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில், மனித மலம் கலந்தவர்கள் மேல் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சமூக மக்களுக்கான நலத்திட்டங்களுக்கு, மத்திய அரசு ஒதுக்கியிருந்த ரூபாய் 10000 கோடி நிதியைச் செலவிடாமல் இருப்பதைக் குறித்து தமிழக முதல்வரிடம் கேள்வி எழுப்பினோம்; அதற்கு தமிழக அரசிடம் இருந்து இன்று வரை பதில் இல்லை. ராணிப்பேட்டையில், கடந்த 2 ஆண்டுகளாக ஆதிதிராவிடர் குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டிடம் கட்டாமல் புறக்கணிக்கும் திமுக ஆட்சி குறித்து நேற்று கேள்வி எழுப்பியுள்ளோம்.

திமுக ஆட்சியில், பட்டியல் சமூக சகோதர, சகோதரிகளுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பட்டியல் பிரிவினருக்கும், பட்டியல் சமூகத்தினருக்கும் வழங்கப்படும் சலுகைகளை மத்திய அரசு வழங்கிய, சட்டசபையில் திமுக இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்து அறிந்திருக்க வேண்டும். தமிழக பாஜகவினர், திமுகவினர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிப்பதில் இருந்து தப்பிப்பதற்காகப் பயன்படுத்திய உத்தியாகத்தான் தெரிகிறது.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் திருமதி. வானதி சீனிவாசன் அவர்கள், சட்டசபையில், பின்வரும் காரணங்களுக்காக இந்தத் தீர்மானம் தேவையற்றது என்று குறிப்பிட்டார்.

1) இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. 1950 ஆம் ஆண்டு, நமது அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, ​​இந்துக்கள் மட்டுமே பட்டியல் பிரிவாகக் கருதப்பட்டனர். பின்னர், காக்கா காலேக்கர் ஆணையத்தின் பரிந்துரையின் கீழ், சீக்கிய மதத்தினரும், 1956 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டனர், மேலும், 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட, ‘சிறுபான்மையினர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான உயர் அதிகாரிகள் குழு’ வின் (HPP) அடிப்படையில் பௌத்த மதத்தினரும் 1990ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டனர்.

2) அக்டோபர் 2022-ல், மத்திய அரசு, இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதி, நீதியரசர் கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில், கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள், பட்டியல் சமூகத்தில் சேர்ப்பதால், தற்போதுள்ள பட்டியலினத்தோர் மத்தியில் ஏற்படும் தாக்கங்களைக் கண்டறிய ஒரு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம், தங்களது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்பிக்க, 2 ஆண்டுகள் அவகாசம் அளித்துள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசு, உங்களைப் போல் அல்லாமல் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் நலனையும் கருத்தில் கொண்டு செயல்படுகிறது என்பதை தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உணர வேண்டும். மத்திய அரசு ஆணையம் அமைத்து 6 மாதங்களுக்குப் பிறகு, அதே நோக்கத்திற்காக ஒரு கண்துடைப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது யாரை ஏமாற்ற?

மத்தியில் 10 ஆண்டுகளாக, ஊழல் காங்கிரஸுடன், திமுக கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ​​இன்று சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை அரசியல் சட்டத்தில் திருத்தமாக கொண்டு வருவதை யார் தடுத்தார்? க.அண்ணாமலை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் எந்த தரவுகளின் அடிப்படையில் இன்று இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது திரு. மு.க. ஸ்டாலின் தெளிவுபடுத்துவரா? அந்த தரவுகளை பொதுவெளியில் வெளியிடத் தயாரா?

திமுக தலைமையிலான தமிழக அரசு, முதலில், தாங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவதில் தங்கள் நேரத்தை செலவிட வேண்டும், தங்கள் கட்சிக்காரர்களின் பட்டியல் சமூக சகோதர, சகோதரிகளின் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு பாதுகாப்பதே அவர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய உதவி என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இறுதியாக, துபாயில் இருந்து, உங்கள் மகனுக்கும் மற்ற முக்கிய திமுக கட்சியினருக்கும் நேரடித் தொடர்புள்ள நிறுவனமான நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட 1000 கோடி முதலீடு குறித்த எங்கள் கேள்விக்கு, முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இன்னும் பதிலளிக்கவில்லை என்பதை பணிவன்புடன் நினைவூட்ட விரும்புகிறோம்.

Previous article1.5 கோடி நிதி பர்சனல் பி.ஏ குளு குளு கார்… திமுக எம்எல்ஏக்களுக்கு அடித்த ஜாக்பாட்!!
Next articleசேலத்தில் ரசாயனம் தெளிக்கப்பட்ட மாம்பழங்களை கைப்பற்றிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள்