சேலத்தில் ரசாயனம் தெளிக்கப்பட்ட மாம்பழங்களை கைப்பற்றிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

0
168
#image_title

சேலத்தில் ரசாயனம் தெளிக்கப்பட்ட மாம்பழங்களை கைப்பற்றிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

சேலத்தில் ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 265 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பிளாஸ்டிக் பை பயன்படுத்தியதற்காக இரண்டு கடைகளுக்கு ரூ.4000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

சேலம் அஸ்தம்பட்டி இருந்து ஏற்காடு ரோடு செல்லும் வழியில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர மாம்பழக் கடைகள் உள்ளிட்ட சிறு வியாபார கடைகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் சுமார் 48 கடைகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் இரண்டு கடைகளில் செயற்கையாக ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட சுமார் 265 கிலோ மாம்பழங்கள் மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகள் 25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இரண்டு கடை உரிமையாளர்களுக்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் நெகிழிப்பைகள் பயன்படுத்தியதற்காக அபராதம் சுமார் 4000 விதிக்கப்பட்டது. கடை உரிமையாளர்களுக்கு பழங்களை இயற்கையான முறையில் பழுக்க வைப்பது சம்பந்தமான அறிவுரைகளும் விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.

author avatar
Savitha