கிருமிப்பரவலை முறியடிப்பதில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் வலியுறுத்தியுள்ளார். நோய்த்தொற்றுத் தடுப்பு மருந்து தொடர்பில் நாடுகள் சொந்த நலனை முன்னிலைப்படுத்துவது, கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் சுணங்கிப் போகச் செய்யும் என்று அவர் எச்சரித்தார். “COVAX” எனும் உலகளாவிய தடுப்பு மருந்துத் திட்டத்தில் மேலும் 78 பணக்கார நாடுகள் சேர்ந்துள்ளன.
அவற்றையும் சேர்த்து அந்தத் திட்டத்தில் பங்கெடுக்கும் நாடுகளின் எண்ணிக்கை 170க்கு உயர்ந்துள்ளது. கிருமித்தொற்றுத் தடுப்பு மருந்தை உலக நாடுகள் சீராக வாங்கவும், விநியோகம் செய்யவும் அந்தத் திட்டம் உதவும். என்றாலும், COVAX தடுப்பு மருந்துத் திட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தெரிவித்துள்ளன. அவை மற்ற நாடுகளுடன் இரு தரப்பு ஒப்பந்தத்தின் மூலம், தங்களுக்குத் தேவையான மருந்து கிடைப்பதை உறுதி செய்துள்ளன.