கொரோனா வைரஸ்தான் கடைசி என நினைத்து விடாதீர்கள்

Photo of author

By Parthipan K

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக எந்த வித முடிவும் எடுக்க முடியாமல் பிதுங்கி நிற்கின்றன.  ஒருபக்கம் வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் , அடுத்த பெருந்தொற்றை சிறப்பாக சமாளிக்க உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டெட்ரோஸ்,’இந்த கொரோனா வைரஸ் தொற்று தான் உலகின் கடைசி வைரஸ் பெருந்தொற்று அல்ல.  பெருந்தொற்று நமது வாழ்வியலின் ஒரு அங்கம் என்பதை வரலாறு நமக்கு கற்று கொடுத்துள்ளது. ஆனால், அடுத்த பெருந்தொற்று வரும் நேரத்தில் உலகம் தற்போதுள்ள தயார் நிலையை விட இன்னும் சிறப்பான சமாளிக்க தயாராக இருக்க வேண்டும்’ என்றார்.