வீட்டு டைல்ஸில் படிந்து இருக்கும் மஞ்சள் கறை சில நிமிடத்தில் நீங்க இப்படி செய்யுங்கள்..!!

0
70
#image_title

வீட்டு டைல்ஸில் படிந்து இருக்கும் மஞ்சள் கறை சில நிமிடத்தில் நீங்க இப்படி செய்யுங்கள்..!!

நம் வீட்டு கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இவ்வாறு செய்வதன் மூலம் நோய் கிருமிகள் நம் உடலை அண்டாமல் இருக்கும். தினமும் பாத்ரூம் பயன்படுத்தவதால் பாசி பிடித்து, அழுக்கு மற்றும் மஞ்சள் கறைகள் படிந்து காணப்படும். இதனை சரி செய்ய அதிக பணம் செலவு செய்யத் தேவையில்லை. வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து எளிதில் கறைகளை நீக்கி விடலாம்.

தேவையான பொருட்கள்:-

*எலுமிச்சை சாறு

*வாஷிங் லிக்விட்

*வினிகர்

*சோடா உப்பு

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜாரில் 1/4 கப் எலுமிச்சை சாறு, 2 தேக்கரண்டி வாஷிங் லிக்விட், ஒரு கைப்பிடி அளவு சோடா உப்பு, 4 தேக்கரண்டி வினிகர் சேர்த்து நன்கு அரைக்கவும். இவ்வாறு அரைப்பதன் மூலம் அவை பேஸ்ட் பதத்திற்கு வந்துவிடும்.

அடுத்து இந்த பேஸ்டை ஒரு பவுலுக்கு மாற்றி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். பின்னர் ஒரு ஸ்பிரேயரில் இந்த கலவையை ஊற்றி பாத்ரூமில் அழுக்கு கறைகள், மஞ்சள் கறைகள் இருக்கும் இடத்தில் நன்கு ஸ்ப்ரே செய்து 15 முதல் 20 நிமிடம் வரை ஊற விடவும்.

பின்னர் டைல்ஸில் ஒட்டிருந்த கறைகள் ஊறி வந்த பின்னர் ஸ்க்ரப்பர் யூஸ் பண்ணி நன்கு தேய்க்கவும். பின்னர் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தால் டைல்ஸ் புதிது போன்று பளிச்சிடும்.