வாங்கிய கடன் அனைத்தும் விரைவில் அடைந்து போக இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

Photo of author

By Divya

வாங்கிய கடன் அனைத்தும் விரைவில் அடைந்து போக இந்த பரிகாரத்தை செய்யுங்கள்!

உழைத்து ஈட்டும் வருமானத்தில் இருந்து 20% சேமிப்பாக ஒவ்வொருவரும் எடுத்து வைக்க வேண்ட்டும். அப்படி செய்யத் தவறினால் அவரச காலங்களில் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம். ஆனால் எவ்வளவு சம்பாதித்து, சேமித்தாலும் சில கஷ்ட காலங்களில் பணத் தேவை அதிகரித்து கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.

இந்த கடன் பிரச்சனை நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய பரிகாரத்தை செய்து பலனடையுங்கள். எந்த ஒரு வீட்டில் மஹாலட்சுமி அருள் இருக்கின்றதோ அந்த வீட்டில் பண வரவு அதிகரிக்கும், கடன் வாங்கும் நிலை ஒருபோதும் ஏற்படாது. எனவே மஹாலட்சமி தயார் வீட்டில் வாசம் செய்ய நாம் சில பரிகாரத்தை செய்வது அவசியம் ஆகும்.

பரிகாரம்:-

வீட்டு பூஜை அறையில் வெள்ளை காட்டன் துணி ஒன்றை வைத்து கொள்ளவும். அதில் மஞ்சள், குங்குமம் சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் சிறிதளவு பெருஞ்சீரகம், ஏலக்காய், பச்சை கற்பூரம் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதை மூட்டையாக கட்டி லட்சுமி தயார் திருவுருவ படத்திற்கு முன் வைத்து கடன் பிரச்சனை நீங்கி பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளவும். மூட்டையில் உள்ள பொருட்களின் வாசம் குறைந்து விட்டால் மீண்டும் மாற்றி வைக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வீட்டில் கடன் பிரச்சனை தீர்ந்து பண வரவு அதிகரிக்கும்.