முகத்தில் உள்ள மங்கு விரல் விட்டு எண்ணும் தினங்களில் மறைய இப்படி செய்யுங்கள்!

Photo of author

By Divya

முகத்தில் உள்ள மங்கு விரல் விட்டு எண்ணும் தினங்களில் மறைய இப்படி செய்யுங்கள்!

மங்கு என்பது சாதாரண தோல் பாதிப்பு தான். இவை அனைத்து வயதினருக்கும் ஏற்படக் கூடியவை. மங்கு ஏற்பட்டால் முகம் வயதான தோற்றத்தை அடைந்து விடும்.

மங்கு ஏற்பட காரணங்கள்…

உடலில் அதிகளவு வெயில் படுதல், மன உளைச்சல், தைராய்டு பாதிப்பு, ஹார்மோன் பிரச்சனை ஆகியவற்றால் இவை ஏற்படுகிறது.

மங்கு மறைய நீங்கள் செய்ய வேண்டிய வீட்டு வைத்தியம்…

*ஆப்பிள் சீடர் வினிகர்

ஒரு கிண்ணத்தில் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தண்ணீர் சம அளவு எடுத்து கலந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீர் கொண்டு முகத்தை கழுவினால் மங்கு சில தினங்களில் மறையும்.

*வேப்பங்கொழுந்து
*சந்தனம்
*ஜாதிக்காய்

வேப்பங்கொழுந்தை உலர்த்தி சந்தனத்துடன் சேர்த்து பொடியாக்கி அதனுடன் சிறிது ஜாதிக்காய் பொடியை சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி பேஸ்டாக்கி கொள்ளவும். இதை முகத்தில் பூசி அரை மணி நேரத்திற்கு பின்னர் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்தால் மங்கு சில தினங்களில் மறையும்.