உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் பெருக இவ்வாறு செய்யுங்கள்!

Photo of author

By Divya

உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் பெருக இவ்வாறு செய்யுங்கள்!

வீட்டில் நேர்மறை ஆற்றல் இருந்தால் தான் மகிழ்ச்சி, மன நிறைவு, பண வரவு ஆகியவை அதிகரிக்கும். ஒருவேளை எதிர்மறை ஆற்றல், கண் திருஷ்டி இருந்தால் அந்த வீட்டில் நிம்மதி இல்லாமை, பிணி, கெட்ட காரியங்கள் அதிகம் நடக்கும்.

வீட்டில் இந்த எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரத்தை அவசியம் செய்து வரவும். தொடர்ந்து செய்து வந்தால் 27 நாட்களில் பலனைக் கண் கூடாக பார்க்க முடியும்.

உங்கள் வீட்டின் நடுப்பகுதியில் அதாவது பிரம்மஸ்தானத்தில் மாலை 6 மணி அளவில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அதற்கு முதலில் கற்பூரம் மற்றும் அகல் எடுத்துக் கொள்ளவும்.

மாலை 6 மணிக்கு பிரம்மஸ்தானத்தில் ஒரு அகல் வைத்து அதில் 2 கற்பூரத்தை போட்டு எரிய விடவும்.

வாரத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையில் சூடத்தோடு 2 இலவங்கம், 1 பிரியாணி இலை, 1 ஏலக்காய் சேர்த்து எரிய விடவும்.

இவ்வாறு தொடர்ந்து 27 நாட்களுக்கு செய்து வந்தால் வீட்டில் இருந்து எதிர்மறை ஆற்றல் முழுவதும் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.