உப்பு கறை மற்றும் மஞ்சள் கறை படிந்த உங்கள் பாத்ரூம் டைல்ஸை நிமிடத்தில் பளிச்சிட வைக்க இப்படி செய்யுங்கள்!!
நம்மில் பலர் வீட்டு பாத்ரூம் அசுத்தமாக காணப்படும். பாத்ரூமை முறையாக பராமரிக்க தவறினால் நோய் பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். தினமும் பாத்ரூம் யூஸ் பண்ணுவதால் அவை பாசி பிடித்து, உப்பு மற்றும் மஞ்சள் கறைகள் படிந்து காணப்படும். இதனை வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து சில நிமிடத்தில் சுத்தம் செய்து விடலாம்.
தேவையான பொருட்கள்:-
*ஷாம்பு
*ஸ்க்ரப்பர்
*லெமன்
*பேக்கிங் சோடா
செய்முறை:-
ஒரு பாத்திரத்தில் 2 பாக்கெட் ஷாம்பு மற்றும் 1/4 கப் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் அடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
பாத்ரூமில் உப்பு மற்றும் மஞ்சள் கறை படிந்துள்ள இடத்தில் 1 கைப்பிடி அளவு பேக்கிங் சோடாவை தூவி விட்டு 5 நிமிடங்களுக்கு ஊற போடவும். அடுத்து தயார் செய்து வைத்துள்ள ஷாம்பு கலவையை பாத்ரூம் முழுவதும் கறை இருக்கும் இடங்களில் தெளித்து 5 நிமிடங்களுக்கு பின்னர் ஒரு ஸ்க்ரப்பர் கொண்டு நன்கு தேய்க்கவும். இவ்வாறு தேய்த்த பின்னர் 5 நிமிடங்கள் வரை அப்படியே விடவும்.
அதன் பின்னர் மீண்டும் ஸ்க்ரப்பர் கொண்டு அதனை தேய்த்து தண்ணீர் ஊற்றி பாத்ரூமை கழுவி விடவும். இவ்வாறு செய்தால் பாத்ரூமில் படிந்து கிடந்த மஞ்சள் மற்றும் உப்பு கறை முழுவதும் நீங்கி பாத்ரூம் புதிது போன்று பளிச்சிடும்.