பெண் தெய்வங்களைப் போல் ஆண் தெய்வங்களுக்கு மாவிளக்கு போட்டால் இத்தனை பலன்கள் கிடைக்குமா?

0
95
#image_title

பெண் தெய்வங்களைப் போல் ஆண் தெய்வங்களுக்கு மாவிளக்கு போட்டால் இத்தனை பலன்கள் கிடைக்குமா?

வெங்கடேச பெருமாளுக்கு மாவிளக்கு போடுவதால் கிடைக்கும் பலன்கள்:-

தேவைப்படும் பொருட்கள்:-

*பச்சரிசி மாவு

*வெல்லம்

*ஏலக்காய்

*மஞ்சள், குங்குமம்

*திரி

*தீப எண்ணெய்

மாவிளக்கு போடும் முறை…

சனிக்கிழமை அன்று பச்சரிசி மாவு, வெல்லம், ஏலக்காய் சேர்த்து மாவிளக்கு செய்து கொள்ளவும். ஒரு தட்டில் மஞ்சள், குங்குமம் வைத்து 2 மாவிளக்கு தீபங்கள் ஏற்றி மனதார வேண்டிக் கொண்டு தூப தீபம் காட்டி வழிபடவும்.

தொடர்ந்து 5 சனிக்கிழமை செய்து வர பணப் பிரச்சனைகள் நீங்கி செல்வம் பெருக வழிவகுக்கும்.

முருகப் பெருமானுக்கு மாவிளக்கு போடுவதால் கிடைக்கும் பலன்கள்:-

தேவையான பொருட்கள்:-

*தினை மாவு

*வெல்லம்

*மஞ்சள், குங்குமம்

*தீப எண்ணெய்

*திரி

மாவிளக்கு போடும் முறை…

செவ்வாய்க்கிழமை அன்று தினை மாவு, வெல்லம் கலந்து மாவிளக்கு செய்து கொள்ளவும். ஒரு தட்டில் மஞ்சள், குங்குமம் வைத்து 2 மாவிளக்கு தீபம் ஏற்றி மனதார வேண்டிக் கொண்டு தூப தீபம் காட்டி வழிபடவும்.

தொடர்ந்து 9 வாரங்கள் செய்து வர திருமணத் தடை விலகி திருமணம் கை கூடும்.

முடிந்தவர்கள் 9 வாரங்கள் செய்து வர திருமணத் தடை விலகி திருமணம் கைகூடும்.

முடிந்தவர்கள் 9வது வாரம் இந்த விளக்கை திருச்செந்தூரில் ஏற்றினால் வெகு விரைவில் பலன் கிடைக்கும்.