உங்கள் வீட்டில் ஒரே கொசுத் தொல்லையா இருக்கா? அப்போ இதை செய்தால் நிமிடத்தில் தீர்வு கிடைக்கும்!!

Photo of author

By Divya

உங்கள் வீட்டில் ஒரே கொசுத் தொல்லையா இருக்கா? அப்போ இதை செய்தால் நிமிடத்தில் தீர்வு கிடைக்கும்!!

மழைக்காலம் ஆரமித்து விட்டாலே கொசுக்களுக்கு கொண்டாட்டம் தான். மழையால் தேங்கி இருக்கும் தண்ணீரால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி மனிதர்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். அதிலும் அனோபிலஸ்’ ,’ஏடிஸ் ஏஜிப்டி’ போன்ற கொசுக்கள் உயிருக்கு ஆபத்தான நோய்களை பரப்பும் அபாயத்தை கொண்டிருக்கிறது.

கொசுக்களால் பரவும் நோய்கள்:-

*மலேரியா

*டெங்கு

*சிக்கன்குனியா

*ஜிகா வைரஸ்

இந்த கொசு தொல்லையில் இருந்து தப்பிக்க கொசுவலை, கொசுவர்த்தி சுருள், குட் நைட், ஆல் அவுட் போன்ற ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்தி வந்தாலும் கொசுக்கள் மட்டும் ஒழிஞ்சபாடு இல்லை.

இந்த கொசுக்களை விரட்ட இயற்கை வழிகளை பின்பற்றினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கிராம்பு

*சூடம்

*மண் விளக்கு

*வேப்பிலை

செய்முறை:-

ஒரு மண் விளக்கு எடுத்து அதில் 4 கிராம்பு சேர்த்துக் கொள்ளவும். அடுத்து பூஜைக்கு பயன்படுத்தும் சூடம் 3 எடுத்து அதில் சேர்த்துக் கொள்ளவும்.

பின்னர் இந்த விளக்கை பற்ற வைக்கவும். இதற்கு முன்னதாக வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்கள் அனைத்தையும் மூடி விடவும்.

இலவங்கம் மற்றும் கற்பூரம் எரிந்து கொண்டிருக்கும் பொழுது அதில் 1 அல்லது 2 வேப்பிலை சேர்க்கவும். இந்த விளக்கில் இருந்து வரும் வாசனை கொசுக்களுக்கு சுத்தமாக பிடிக்காது.

இந்த வாசனையை தாங்க முடியாமல் வீட்டில் பதுங்கி நம் ரத்தத்தை உறிஞ்சி வந்த கொசுக்கள் மடிந்து போகும். இந்த ரெமிடியை தினமும் செய்து வந்தோம் என்றால் நம் வீட்டை சுற்றி பதுங்கி இருக்கும் கொசுக்களுக்கு குட் பாய் சொல்லி விடலாம்.