தீராத தொண்டைப் புண் இருக்கா! படிகாரக் கல்லை இப்படி பயன்படுத்துங்க!!

Photo of author

By Sakthi

தீராத தொண்டைப் புண் இருக்கா! படிகாரக் கல்லை இப்படி பயன்படுத்துங்க!!

நாம் கண் திருஷ்டிக்காக படிகாரக் கற்களை பயன்படுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளோம். திருஷ்டிக்காக பயன்படுத்தப்படும் இந்த படிகாரக் கற்களில் பல வகையான மருத்துவ குணங்கள் இருக்கின்றது.

இந்த படிகாரக் கற்களை வைத்து நாம் சருமத்திற்கு மருந்தாக பயன்படுத்தலாம். கண்வலியை குறைக்க மருந்தாக பயன்படுத்தலாம். மேலும் பாத வெடிப்புகள் குணப்படுத்தும் மருந்தாகவும் படிகாரக் கற்களை பயன்படுத்தலாம்.

இந்த படிகாரக் கற்களை வைத்து நாம் தொண்டை புண்களை கூட ஆற வைக்க முடியும். அதற்கு படிகாரக் கற்களின் தூளுடன் இரண்டு பேருக்குமே பயன்படுத்தி மருந்து தயாரித்து வாய் கொப்பளிக்க வேண்டும். அது என்னென்ன பொருட்கள், எவ்வாறு என்பது பற்றி தற்பொழுது பார்க்கலாம்.

அதற்கு தேவையான பொருட்கள்…

* படிகார கற்களின் தூள்
* மாதுளம் பூ
* மாதுளம் பட்டை

தயார் செய்யும் முறை…

அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரம் வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இதில் மாதுளம் பூ மற்றும் மாதுளம் பட்டை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

இது நன்றாக குதித்த பின் அடுப்பை அணைத்து விட்டு அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் இந்த தண்ணீரில் படிக்கக் கற்களின் தூள் சிறிதளவு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். தொண்டை புண்களை ஆற வைக்கும் மருந்து தயார்.

இந்த மருந்தை வைத்து காலை மற்றும் மாலை தினமும் இரண்டு வேலைகளில் வாய் கொப்பளிக்க வேண்டும். அவ்வாறு கொப்பளித்து வரும் பொழுது தொண்டை புண்கள் அனைத்தும் ஆறத் தொடங்கும்.