உங்களுக்கு அல்சர் இருக்கா? இதை ஒரே நாளில் குணமாக்க மோர் + வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

Photo of author

By Divya

உங்களுக்கு அல்சர் இருக்கா? இதை ஒரே நாளில் குணமாக்க மோர் + வெந்தயத்தை இப்படி பயன்படுத்துங்கள்!!

இன்றைய உலகில் பணம் சம்பாதிக்க மனிதர்கள் இயந்திரம் போல் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் உரிய நேரத்தில் உணவருந்தாமல் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொண்டிருக்கிறோம். இதனால் நாம் சந்திக்கும் பின் விளைவுகள் ஏராளம் என்று நம்மில் பலரும் அறிவதில்லை.

உயிர் வாழ உணவு அவசியம். இந்த உணவை நாம் காலை, மதியம், இரவு என்று மூன்று வேலை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். அப்படி இருக்கையில் உணவை முறையாக உண்ணாமல் அவற்றை தவிர்த்தோம் என்றால் அல்சர் பாதிப்பு ஏற்படத் தொடங்கும்.

அல்சர் பாதிப்பு அறிகுறி:-

*நெஞ்சு பகுதியில் எரிச்சல் உணர்வு

*பசியின்மை

*புளித்த ஏப்பம்

*வயிற்று வலி

அல்சர் ஏற்படக் காரணங்கள்:-

*காரம் நிறைந்த உணவு

*புளிப்பு நிறைந்த உணவு

*எண்ணெயில் பொரித்தெடுத்து உணவு

*புகைபிடித்தல்

*மென் குளிர்பானங்கள்

*காபி, தேநீர் அதிகம் பருகுதல்

*முறையற்ற உணவுப்பழக்கம்

*உணவை தவிர்த்தல்

அல்சர் பாதிப்பால் ஏற்படும் பிரச்சனைகள்:-

*இரைப்பை புற்று நோய்

*இரத்த வாந்தி

*குடல் அடைப்பு

*அல்சர் புண்ணில் இரத்த கசிவு

அல்சரை குணமாக்க உதவும் இயற்கை வைத்தியம்:-

தேவையான பொருட்கள்:-

*மோர்

*வெந்தயம்

*சீரகம்

செய்முறை:-

ஒரு தேக்கரண்டி வெந்தயம் மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகத்தை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு கிளாஸ் மோரில் இடித்து வைத்துள்ள வெந்தயம், சீரக பொடியை சேர்த்து கலக்கவும். தேவைப்பட்டால் சிறிதளவு இந்துப்பு கலந்து பருகலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் பாடாய் படுத்தி வந்த அல்சர் பாதிப்பு விரைவில் குணமாகும்.