உங்கள் மூக்கின் மீது கரும்புள்ளிகள் உள்ளதா? அப்போ இதை பயன்படுத்தி சரி செய்யுங்கள்!!

0
87
#image_title

உங்கள் மூக்கின் மீது கரும்புள்ளிகள் உள்ளதா? அப்போ இதை பயன்படுத்தி சரி செய்யுங்கள்!!

உங்களில் பெரும்பாலானோருக்கு மூக்கின் மேல் சொரசொரப்பாக கரும்புள்ளிகள் இருக்கும்.இவை பார்க்க சிறிதாக இருந்தாலும் முக அழகை விரைவில் கெடுத்து விடும்.எனவே மூக்கின் மீதுள்ள கருமை நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும்.

தீர்வு 01:-

1)தக்காளி
2)மஞ்சள் தூள்

ஒரு துண்டு தக்காளியை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.இதில் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து குழைத்து மூக்கின் மீது தடவினால் கரும்புள்ளிகள் நீங்கி விடும்.

தீர்வு 02:-

1)சர்க்கரை
2)காபி தூள்

ஒரு கிண்ணத்தில் 1/4 தேக்கரண்டி காபி தூள் மற்றும் 1/4 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்.பிறகு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு குழைத்து மூக்கின் மீது தடவி 30 நிமிடங்களுக்கு பின்னர் வெந்நீர் கொண்டு கழுவவும்.இவ்வாறு செய்தால் மூக்கின் மீது உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

தீர்வு 03:-

1)பட்டை
2)தேன்

ஒரு துண்டு பட்டையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.இதில் சிறிது தேன் சேர்த்து குழைத்து மூக்கின் மீது தடவி 30 நிமிடங்களுக்கு பின்னர் வெந்நீர் கொண்டு கழுவவும்.இவ்வாறு செய்தால் மூக்கின் மீது உள்ள கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.