செரிமான பிரச்சனை இருக்கிறதா! பசும்மஞ்சளை இவ்வாறு பயன்படுத்துங்க!!

Photo of author

By Sakthi

செரிமான பிரச்சனை இருக்கிறதா! பசும்மஞ்சளை இவ்வாறு பயன்படுத்துங்க!!

செரிமான பிரச்சனை இருக்கும் நபர்கள் அனைவருக்கும் அந்த பிரச்சனையை சரி செய்வதற்கு என்ன மருந்து தயார் செய்து பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

பெரும்பாலும் நாம் சாப்பிடும் உணவுகள் எளிதில் செரிமானம் ஆவது கிடையாது. சில சமயங்களில் இது பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே இந்த செரிமான பிரச்சனையை சரிசெய்ய நாம் பசும்மஞ்சளை பயன்படுத்தலாம். இந்த பசும்மஞ்சளை செரிமானம் பிரச்சனையை சரிசெய்ய எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.

செரிமான பிரச்சனையை சரி செய்யும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருட்கள்…

* பசும்மஞ்சள்
* ஏலக்காய்
* சீரகம்
* மிளகு
* கிராம்பு
* ஜாதிக்காய்
* எலுமிச்சை சாறு
* தேன்

செய்முறை…

முதலில் எடுத்து வைத்துள்ள பசும்மஞ்சளை எடுத்து தோல் சீவி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் பாத்திரம் வைத்து இந்த மஞ்சள் சாறை அந்த பாத்திரத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதில் ஏலக்காய், சீரகம், கிராம்பு, மிளகு, ஜாதிக்காய், எலுமிச்சை சாறு ஆகிய பொருட்களை சேர்த்து காய்ச்ச வேண்டும். பின்னர் இதில் தேன் கலந்தால் செரிமான பிரச்சனையை குணப்படுத்தும் மருந்து தயார். இந்த மருந்தை குடித்தால் செரிமானம் எளிதில் நடக்கும். மேலும் சமீபத்தில் ஏற்படும் தலைவலி, ஜுரம் ஆகிய பிரச்சனைகள் குணமாகும்.