Skip to content
News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • Cinema
  • Sports
Breaking News

பான் கார்டு இருக்கா?? அபராதம் கட்டுங்க!! இல்லனா பிளாக் செய்யப்படும்!!

Published On: 01 ஜூலை 2023, 6:30 காலை | By Parthipan K

பான் கார்டு இருக்கா?? அபராதம் கட்டுங்க!! இல்லனா பிளாக் செய்யப்படும்!!

பான் கார்டு (Permanent Account Number) ஏன் எடுக்க வேண்டும் என்கிற கேள்வி எழுவது இயல்பானதுதான். பான் கார்டு குறித்து அறிந்தவர்கள் கூட அது வருமான வரி கணக்குத் தேவைகளுக்குத்தான் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

இந்திய குடிமகன் ஒவ்வொருவரது பண பரிவர்த்தனைகளும் பாதுகாப் பானதாகவும், நம்பகமானதாகவும் இருக்க உதவுவது பான் கார்டுதான்.

நிரந்தர கணக்கு எண் கொண்ட பான் கார்டு 10 எழுத்துக்களைக் கொண்ட ஒரு குறியீடு. இந்த எண் நிரந்தரமானது. அடிக்கடி மாற்றத்தக்கது அல்ல. முகவரி மாறினாலோ அல்லது வேறு மாநிலத்திற்கு சென்றால்கூட இந்த எண்ணை மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை இல்லை. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள், இந்தியாவில் பரிவர்த்தனையில் ஈடுபட்டாலும் பான் கார்டு அவசியம்.

இதன் மூலம் வரி ஏய்ப்பு மறைமுகமாகத் தடுக்கப்படுகிறது. தவிர இந்திய குடிமகன் என்பதற்கான அடையாள ஆவணமாகவும் பல இடங்களில் பான் கார்டு பயன்படுகிறது. தனிநபர் அல்லது நிறுவனம் குடும்ப அமைப்பு என யார் பெயருக்கு வேண்டுமானாலும் பான் கார்டு வாங்கலாம்.

ஆனால் ஒருவர் பெயரில் அல்லது ஒரு நிறுவனம் பெயரில் வாங்கப்பட்ட பான் கார்டை வேறொருவருக்கு மாற்ற முடியாது. பான் கார்டு வழங்கும் முறை மிக துல்லியமானது. தவறான தகவல்கள், ஆவணங்கள் கொடுத்து ஒருவர் ஒரு பான் கார்டிற்கு மேல் வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகவும் கருதப்படும்.

பணம் பரிவர்த்தனை போன்ற அனைத்து தேவைகளுக்கும் பான் கார்டு கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

கடந்த முறை மத்திய அரசின் அறிவிப்பின்படி நமது நாட்டின் அடையாள அட்டைகளில் பான் கார்டும் ஒன்றாக மாறிவிட்டது.இவ்வாறு முக்கியமாக உள்ள இந்த பான் கார்டு இனி செல்லாது ஏனென்றால்,

மத்திய அரசின் அறிவிப்பின்படி ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க வேண்டும் இதற்கான அரசாணை வெளியிட்ட போது பலரும் இதனை எதிர்த்தனர்.

இதற்கு எதிராக வழக்கு பதிவு செய்த போது முதலில் சுப்ரீம் கோர்ட் இதனை மறுத்தது பின்னர் இது வரியைப்யேபை எதிர்ப்பதற்கு என்ற காரணத்தால் அனுமதி அளித்தது.

இதனால் மத்திய அரசு ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்க தேதி அறிவித்துள்ளது. அந்த தேதியின்படி ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காத அனைத்து நபர்களின் பான் கார்டும் இனி செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் குறிப்பிட்ட தேதிக்கு மேல் விண்ணப்பிப்பவர்களுக்கு ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இதனை எவ்வாறு இணைக்க வேண்டும் என்பதை பார்க்கலாம்.அரசு அங்கீகாரப்பூர்வமாக கொடுத்துள்ள https://WWW. incomtax.gov.in இணையதள பக்கத்தில் செல்லவும்.

பின்பு அதில் கேட்கப்படும் ஆதார் எண் மற்றும் பான் கார்டு எண்ணை பதிவு செய்யவும்.

ஆதார் மற்றும் பான் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை அதில் பதிவு செய்ய வேண்டும். பின்னர் ஒரு OTP தொலைபேசி எண்ணிற்கு வரும்.மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள ஆண்டு 2023 என்பதை குறிப்பிட வேண்டும்.

தேதிக்கு மேல் இணைக்கப்பட்டால் ரூ 1,000 அபராதம் செலுத்த வேண்டும் அதனால் அதில் கேட்கப்படும் வங்கிக் கணக்கிற்கு அந்த பணத்தை அனுப்ப வேண்டும்.

இறுதியாக submit என்பதை கொடுக்க வேண்டும். இவற்றின் மூலம் ஒரு வாரத்திற்குள் நமது ஆதார் மற்றும் பான் கார்டுஇணைக்கப்படும்.

© 2025 News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports • Built with GeneratePress