வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்? வெளிவந்த முக்கிய தகவல்!!

0
100

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பு கட்டாயம்? வெளிவந்த முக்கிய தகவல்!!

ஆதார் அட்டையை அனைத்து இணைப்புகளுடனும் இணைக்க வேண்டும் என்று அவ்வபோது புதிய அறிவிப்புகள் வரும் வேளையில் வாக்காளர் அடையாள அட்டையுடனும் இணைக்க வேண்டும் என ஓர் வருடத்திற்கு முன்பே கூறினர்.

வாக்காளர் அடையாள அட்டையினால் ஏற்படும் குளறுபடிகள் போன்றவற்றை நிவர்த்தி செய்ய ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதன் மூலம் குளறுபடிகள் ஏற்படுவது தவிர்க்கப்படும். ஆதார் அட்டை மட்டுமல்லாமல் குடும்ப அட்டை வங்கி கணக்கு போன்ற 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை இணைத்துக் கொள்ளலாம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியது. இந்த ஆதார் இணைக்கும் பணியானது கடந்த வருடம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் தொடங்கியது.

இதனை ஆன்லைன் வழியாகவோ அல்லது இதற்கென்று பிரத்தியேகமாக கொண்டு வரப்பட்ட 6B என்ற படிவத்தின் மூலமாகவும் இதனை செய்து கொள்ளலாம். அதாவது தேர்தல் சமயங்களில் அல்லது மூன்று மாதத்திற்கு ஒரு முறை வீடு தோறும் வாக்காளர் பதிவு அலுவலர்கள் வருவர். அவர்கள் மூலம் இந்த படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக் கொள்ளலாம்.

இல்லையென்றால் வோட்டார் ஹெல்ப்லைன் ஆப் என்ற செயலி மூலமும் இணைத்துக் கொள்ளலாம் என கூறினர். அந்த வகையில் தற்போது வரை எழுபது சதவீதம் பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக இந்திய தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் ஆனது 2024 ஆம் ஆண்டு நடைபெறுவதையொட்டி மின்னணு இயந்திரங்கள் ஆய்வு செய்யும் பணியானது ஜூலை மாதம் முதல் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேற்கொண்டு இந்த வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டை இணைப்பது அவசியம் இல்லை எனக் கூறி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.