உங்களுக்கு தைராய்டு இருக்கா? அப்போ இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்திடுங்கள் ப்ளீஸ்!!

Photo of author

By Divya

உங்களுக்கு தைராய்டு இருக்கா? அப்போ இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்திடுங்கள் ப்ளீஸ்!!

Divya

Updated on:

உங்களுக்கு தைராய்டு இருக்கா? அப்போ இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்திடுங்கள் ப்ளீஸ்!!

பெண்களை அதிகம் பாதிக்கும் நோயாக உள்ள தைராய்டால் ஒழுங்கற்ற மாதவிடாய், கருவுறுதலில் தாமதம் போன்றவை ஏற்படும். இந்த தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கட்டாயம் சில உணவுகளை தவிர்க்க வேண்டும்.

பால் பொருட்களை அதிகளவு எடுத்துக் கொள்ள கூடாது. குறிப்பாக தைராய்டிற்கு மருந்து சாப்பிடும் பொழுது பாலை முழுமையாக தவிர்க்க வேண்டும். காரணம் தைராய்டு மருந்து உடலில் செல்வதை பால் தடுத்து விடும்.

சோயா பொருட்களால் செய்யப்பட்ட உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும். சோயாவில் உள்ள மூல பொருட்கள் தைராய்டு ஹார்மோனை அதிகளவு பாதிக்கும்.

கோதுமை, பார்லியை அதிகளவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

அதிக உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கவும். காபி, டீ அடிக்கடி குடிக்க கூடாது. முடிந்தவரை காபி, டீ குடிக்கும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது நல்லது.