Home Health Tips உங்களது உடலில் அதிகம் உடல் சூடு இருக்கின்றதா… இதை குறைக்க சில எளிமையான வழிமுறைகள் இதோ!!

உங்களது உடலில் அதிகம் உடல் சூடு இருக்கின்றதா… இதை குறைக்க சில எளிமையான வழிமுறைகள் இதோ!!

0
உங்களது உடலில் அதிகம் உடல் சூடு இருக்கின்றதா… இதை குறைக்க சில எளிமையான வழிமுறைகள் இதோ!!

 

உங்களது உடலில் அதிகம் உடல் சூடு இருக்கின்றதா… இதை குறைக்க சில எளிமையான வழிமுறைகள் இதோ…

 

உடலில் உள்ள அதிக உடல் சூட்டை குறைக்க சில எளிமையான வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் சில எளிமையான வழிமுறைகளை செய்வது மூலமாக எளிமையாக உடல் சூட்டை குறைக்கலாம்.

 

ஆடல் சூட்டினால் பல தீமைகள் நமக்கு வந்து சேரும். நமது உடலில் சூடு அதிகமானால் கண் எரிச்சல் ஏற்படும். வாய்ப்புண், வயிற்று வலி, தூக்கமின்மை, குமட்டல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உடலில் சூடு அதிகரித்தால் பித்தப்பையில் பாதிப்புகள் ஏற்படும். அது மட்டுமில்லாமல் உடல் சூடு அதிகரிப்பால் கல்லீரலிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட உடல் சூட்டை குறைக்க வேண்டும். ஆகவே உடல் சூட்டை குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

 

உடல் சூட்டை குறைக்க சில வழிமுறைகள்…

 

* உடல் சூட்டை குறைக்க ஒரு டம்ளரில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு வெந்தயத்தை ஊறவைத்து பின்னர் அதை குடித்து வரலாம்.

 

* உடல் சூடு குறைய தினமும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் தினமும் குடிக்க வேண்டும். அதுவும் உதட்டில் தண்ணீர் படும்படி கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க வேண்டும்.

 

* உடல் சூடு குறைவதற்கு தினமும் வருண முத்திரையை 30 நிமிடங்கள் செய்யலாம். தினமும் வருண முத்திரையை 30 நிமிடங்களுக்கு செய்து வரும் பொழுது உடலில் தண்ணீர் சமநிலையில் இருக்கும். இதனால் உடல் சூடு குறையும்.

 

* உடல் சூடு அதிகமாக உள்ள நபர்கள் உடல் சூட்டை குறைக்க விளக்கெண்ணெய் பயன்படுத்தலாம். விளக்கெண்ணெயை வயிற்றில் வைத்து நன்கு மசாஜ் செய்து வந்தால் உடல் சூடு குறையும். மேலும் விளக்கெண்ணெயை இரண்டு கால்களின் பெரு விரல்களிலும் வைத்து வந்தால் உடல் சூடு குறையும்.