அக்கி நோய் வந்துவிட்டதா… இதை குணப்படுத்த மூன்று மருந்துகள் இதோ!!

0
36

 

அக்கி நோய் வந்துவிட்டதா… இதை குணப்படுத்த மூன்று மருந்துகள் இதோ…

 

நம்மில் சிலருக்கு வரும் அக்கி நோயை குணப்படுத்த சிறப்பான எளிமையான மூன்று மருந்துகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 

அக்கி நோயானது அம்மை நோய் போலவே பெரும்பாலும் வெயில் காலங்களில் வருவது தான். இதுவும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகின்றது. அக்கி நோய் என்பது புதிதாக வருவது கிடையாது. ஏற்கனவே அம்மை நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அக்கி நோய் ஏற்படும். அம்மை நோய்கள் ஏற்பட்டு குணமாணாலும் அதன் வைரஸ் கிருமிகள் உடலை விட்டு முழுமையாக நீங்காமல் இருப்பதால் அக்கி நோய் ஏற்படுகின்றது.

 

சில சமயங்களில் சில அம்மை நோய் கிருமிகள் பல ஆண்டுகளாக உடலில் தங்கிவிடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் பொழுது இந்த வைரஸ் கிருமிகள் அக்கி நோயாக வெளிப்படுகின்றது.

 

இந்த அக்கி நோய் வந்துவிட்டால் மண்பாண்டம் செய்பவர்களிடம் சென்றால் அவர்கள் காவி மண்ணைக் கொண்டு அக்கி நோய் வந்தவர்களின் உடலில் காளி அம்மன் உருவம் வரைந்து மந்திரம் கூறி செபித்து அனுப்புவார்கள். இதனால் வலியும், வேதனையும் குறையும். மேலும் இந்த அக்கி நோயை குணப்படுத்த இந்த பதிவில் சில மருத்துவ முறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

 

மருத்துவ முறை 1…

 

நாட்டு மருந்து கடைகளில் பூங்காவி பொடி வாங்கிக் கொள்ளவும். பின்னர் இதை துணியில் வைத்து சலித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் இதில் பன்னீர் சேர்த்து கலந்து அக்கி உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் வலி, எரிச்சல் குறையும்.

 

மருத்துவ முறை 2…

 

ஊமத்தை இலையை பறித்து சுத்தம் செய்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதில் வெண்ணெயை கலந்து அக்கி உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். இதனால் கொப்புளங்கள் அடங்கும். வலி, எரிச்சல் குறையும்.

 

மருத்துவ முறை 3…

 

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் குங்கிலிய பற்பம் 10 கிராம் வாங்கிக் கொள்ளவும். அதிலிருந்து மொச்சைக் கொட்டையின் அளவு எடுத்துக் கொள்ளவும். இதில் சிறிதளவு வெண்ணெய் கலந்து காலை மற்றும் மாலை என்று இரண்டு வேலை தொடர்ந்து 7 நாட்கள் உண்டு வந்தால் அக்கி குணமாகும்.