உங்கள் பற்களில் மஞ்சள் கறை உள்ளதா? இதற்கான இயற்கை தீர்வு இதோ!!

0
47
#image_title

உங்கள் பற்களில் மஞ்சள் கறை உள்ளதா? இதற்கான இயற்கை தீர்வு இதோ!!

நம் அழகை வெளிக்காட்டுவதில் பற்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. நம் முன்னோர்கள் அனைவரும் வேப்பங்குச்சி உள்ளிட்ட இயற்கை பொருட்களை கொண்டு பற்களை சுத்தம் செய்து வந்ததால் அவர்களுக்கு மஞ்சள் பற்கள், ஈறுகளில் ரத்தம் கசிதல், பல் சொத்தை ஆகுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வில்லை. ஆனால் தற்பொழுது இந்த முறைகளை யாரும் கடைபிடிப்பதில்லை. இதனால் குழந்தை பருவத்திலேயே அனைவருக்கும் பற்கள் மஞ்சள் நிறத்தில் காண தொடங்கி விடுகிறது.

மஞ்சள் பல் உருவாகக் காரணம்:-

உணவு முறை மாற்றம்

ஆரோக்கியமற்ற வாழ்க்கை

புகை பிடித்தல்

மது அருந்துதல்

டீ, காபி அதிகம் பருகுதல்

தேவையான பொருட்கள்:-

**கல் உப்பு

**எலுமிச்சை சாறு

**வேப்ப இலை பொடி

**கிராம்பு

செய்முறை…

ஒரு மிக்ஸி ஜாரில் கல் உப்பு சிறிதளவு, உலர்ந்த வேப்ப இலை 1/4 கைப்படிஅளவு, 4 கிராம்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

பின்னர் இதை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளவும். அடுத்து சிறிதளவு எலுமிச்சை சாற்றை அதில் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும்.

இதை பல் துலக்கும் ப்ரஸில் வைத்து பற்களை நன்கு துலக்கவும். இவ்வாறு செய்தால் பல்லில் உள்ள மஞ்சள் கறை நீங்கி பற்கள் பளிச்சென்று மாறும்.

தீர்வு 2:

தேவையான பொருட்கள்:-

**மஞ்சள் தூள்

**தூள் உப்பு

**தேங்காய் எண்ணெய்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் மஞ்சள் தூள் சிறிதளவு, தூள் உப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்கி பல் துலக்கும் பிரஸ் மேல் தடவி பற்களை நன்றாக துலக்கவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தோம் என்றால் பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறைகள் நீங்கி அவை பளிச்சிடும்.