9 வகையான பெர்ரி பழங்கள் பற்றி தெரியுமா? அதன் நன்மைகள் பற்றி தெரியுமா?

0
308
#image_title

9 வகையான பெர்ரி பழங்கள் பற்றி தெரியுமா? அதன் நன்மைகள் பற்றி தெரியுமா?

பெர்ரி பழ வகைகளில் 9 வகையான பெர்ரி பழ வகைகள் பற்றியும் 9 வகையான பெர்ரி பழங்களின் நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக பெர்ரி என்று பெயரைக் கேட்டாலே அனைவருக்கும் ஸ்ட்ராபெர்ரி பழம் தான். தமிழகத்திற்கு வரும். அதையடுத்து நியாபகத்திற்கு வரும் பெர்ரி பழ வகை புளூ பெர்ரி வகைதான். இதை தவிர பல வகையான பெர்ரி பழ வகைகள் இருக்கின்றது. அதைப் பற்றி தற்பொழுது காணலாம்.

9 வகையான பெர்ரி பழ வகைகளும் அதன். நன்மைகளும்…

* புளூ பெர்ரி – புளூ பெர்ரி பழம் பொதுவாக நமது உடலில் உள்ள அணுக்களை பாதுக்காக்கின்றது. மேலும் கண்கள் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்துகின்றது. நோய் கிருமிகளை எதிர்த்து போராட புளூ பெர்ரி உதவி செய்கின்றது.

* பிளாக் பெர்ரி – பிளாக் பெர்ரி பழங்கள் பொதுவாக குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. பிளாக் பெர்ரி பழங்களை சாப்பிட்டால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம்.

* ராஸ்பெர்ரி – ராஸ்பெர்ரி பழங்கள் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்கின்றது. மேலும் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்கின்றது.

* ஸ்ட்ராபெர்ரி – ஸ்ட்ராபெர்ரி பழத்தில் கொலாஜன் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது. கர்ப்பமாக உள்ள பெண்கள் ஸ்ட்ராபெர்ரி பழங்களை சாப்பிடுவது நல்லது.

* பிளாக்கர்ண்ட் – பிளாக்கர்ண்ட் பழங்கள் வீக்கத்தைக் குறைக்க உதவி செய்கின்றது. மேலும் இரத்த நாளங்களை தளர்வு படுத்துகின்றது.

* கொஜிபெர்ரி – கொஜிபெர்ரி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொஜிபெர்ரி பழங்களை சாப்பிடலாம்.

* திராட்சை – திராட்சை பழம் பெர்ரி பழ வகைகளில் ஒன்றுதான். திராட்சை பழத்தை சாப்பிட்டு வரும் பொழுது உடல் எடை கட்டுக்குள் இருக்கும். மேலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள திராட்சை பழம் பெரிதும் உதவியாக இருக்கும்.

* க்ரான்பெர்ரி – க்ரான்பெர்ரி பழத்தில் பற்களுக்கும் எலும்புகளுக்கும் தேவையான கால்சியம் சத்துக்கள் இருக்கின்றது. இதனால் பற்கள், எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்கின்றது.

* அகாய் பெர்ரி – அகாய் பெர்ரி பழத்தில் நல்ல கொழுப்புகள் அதிகம் உள்ளது. இதனால் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புச் சத்துக்கள் அகாய் பெர்ரி பழத்தை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கின்றது.