இது தெரியுமா? நீங்கள் குடிக்கும் பாலில் 1 தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!!

இது தெரியுமா? நீங்கள் குடிக்கும் பாலில் 1 தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!!

நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த பால் சிறந்த தீர்வாக இருக்கும். பாலில் உள்ள ஊட்டசத்துக்கள் நம் உடலில் உள்ள பல்வேறு நோய் பாதிப்புகளை குணமாக்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

இந்த பாலுடன் தேன் கலந்து பருகி வந்தோம் என்றால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலை வலுவாக்கும்.

பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-

*புரதம்

*கால்சியம்

*வைட்டமின் பி, சி, டி

மஞ்சளில் உள்ள சத்துக்கள்:-

*குர்க்குமின்

*ஆன்டி-ஆக்ஸிடனட்டுகள்

*ஆன்டி- ஏஜிங்

தேனில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-

*கால்சியம்

*மக்னீசியம்

*வைட்டமின்கள்

*தாதுக்கள்

பாலில் தேன் கலந்து பருகினால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்:-

1)தொண்டை புண், தொண்டை வலி இருக்கும் நபர்கள் தேன் கலந்த பாலை பருகுவது நல்லது.

2)சளி, இருமல் பாதிப்பு இருக்கும் நபர்கள் சூடான பாலில் தேன் கலந்து பருகினால் உடனடி பலன் கிடைக்கும்.

3)விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி மலச்சிக்கலை போக்குகிறது.

4)கண் மற்றும் தோல் தொடர்பான நோயயை குணப்படுத்த தேன் கலந்த பால் சிறந்த தீர்வாக இருக்கும்.

5)வாந்தி, குமட்டல், ஜலதோஷம் இருக்கும் நபர்களுக்கு இவை உரியத் தீர்வாக இருக்கும்.

6)இரத்த ஓட்டத்தை சீராக்குவதில் தேன் கலந்த பால் தீர்வாக உள்ளது. அதேபோல் ஆஸ்துமா நோயால் அவதிப்படும் நபர்கள் தேன் கலந்த பாலை பருகலாம்.

7)உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதில் இவை சிறந்த தீர்வாக இருக்கும். அதேபோல் எலும்பு வளர்ச்சியை ஊக்குவித்து அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

8)உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடலை பிட்டாக வைத்துக் கொள்ள உதவுகிறது.