இது தெரியமா? ஜாதகத்தை வைத்து மரணத்தை கணிக்க முடியும்!!
நம்மில் பலருக்கு ஆன்மிகம், ஜோதிடம் மீது அதிக நம்பிக்கை இருக்கும். நாம் பிறந்த நேரம், நாள் உள்ளிட்டவைகளை வைத்து தான் நம் வாழ்க்கையில் நடக்க கூடிய சுப காரியங்கள் குறித்து அறிய முடிகிறது.
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கு இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருந்தே தீரும். நம் ஜாதகத்தை வைத்து நமக்கு இருக்கும் தோஷம், நம் வாழ்க்கை துணை, வேலை, குழந்தை, எதிர்காலம் உள்ளிட்ட பலவேறு கணிப்பு விஷயங்களை அறிந்து கொள்ள முடிவது போல் நம் இறப்பு எப்பொழுதும் வரும் என்பதை தெளிவாக கணிக்க முடியுமா என்பது குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
உயிருக்கு தான் ஜாதகம். அதுவும் ஆறறிவு கொண்டவருக்கு ஜாதகம் கணிக்கப்படுகிறது. ஒரு குழந்தை பிறக்கின்ற போது அது பிறந்த நாள், நேரம், எந்த இடம், வைத்து ஜாதகம் கணிக்கப்படுகிறது.
இதை வைத்து பூமியை மையமாக வைத்து எந்தெந்த கிரங்கங்கள், எந்தெந்த இடத்தில் உள்ளன என்ற விஞ்ஞான கணக்கை வைத்து ஜாதகம் கணிக்கப்படுகின்றன.
பிறந்த நேரம் தெரியாதவர்களுக்கு ஜாதகம் கணிக்க முடியாது அதற்கு பதிலாக நாடி ஜோதிடம் மூலம் அவர்களுக்கான எதிர்காலத்தை அறிய முடிகிறது.
மரணம் ஏற்படும் நிலை…
மரணத்தை கணிக்க ஜோதிடத்தில் உள்ள ஆயுர்தாயம் உள்ளிட்ட நிறைய சூத்திரங்கள் உள்ளன. பாதகாதிபதி நிலையில் அஷ்டமா புத்தியில் மரணம் ஏற்படும் என்பது ஒரு விதி. கோட்சாரத்தில் லக்கனாதிபதி வலுவிழந்திருப்பார்.
இந்த பாதகாதிபதியும், அஷ்டமாதிபதியும் சஷ்டாஷ்டானமாக இருக்கும் நிலை, ஜாதகரின் ஆயுள் முடியும் நிலையில் உள்ளது எனலாம்.