சர்க்கரை நோயை அலற விடும் சூப்பர் பானம்!! வாரத்திற்கு 2 முறை குடித்தாலே போதுமானது!!

0
45
#image_title

சர்க்கரை நோயை அலற விடும் சூப்பர் பானம்!! வாரத்திற்கு 2 முறை குடித்தாலே போதுமானது!!

தற்காலத்தில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை சூழல் பல்வேறு நோய் பாதிப்புகள் எளிதில் நம்மை தொற்றி விடுகிறது. இதில் சர்க்கரை(நீரிழிவு) பாதிப்பு உருவாகி விட்டால் ஆளை கரைத்து விடும்.
முன்பெல்லாம் 40 வயதை கடந்தவர்களுக்கு மட்டும் வரும் நோயாக இருந்த இவை தற்பொழுது இளம் வயதினர், குழந்தைகள் என்று அனைவரையும் பாரபட்சமின்றி பாதித்து வருகிறது.

சர்க்கரை நோய் ஏற்படக் காரணங்கள்:-

*பரம்பரை நோய்

*உடல் பருமன்

*மன அழுத்தம்

*அதிகளவு இனிப்பு உண்ணுதல்

*உயர் இரத்த அழுத்தம்

*சினைப்பை நீர்க்கட்டி

*சோம்பலான வாழ்க்கை முறை

சர்க்கரை நோய் அறிகுறிகள்:-

*அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல்

*அதிகப்படியான உடல் சோர்வு

*தண்ணீர் தாகம் அதிகரித்தல்

*கண் பார்வை மங்குதல்

*அதிகப்படியான தலைவலி

இந்த சர்க்கரை நோய் பாதிப்பை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணமாக்கி கொள்வது நல்லது. இதை சரி செய்ய கோவைக்காய் சிறந்த தீர்வாக இருக்கும். நம் பாரம்பரிய உணவு காய்கறிகளில் ஒன்று கோவைக்காய். இவை இயற்கையாகவே கசப்பு தன்மை கொண்டிருப்பதால் உணவ எடுத்துக்கொள்ள பலரும் விரும்புவதில்லை. ஆனால் இதன் மகத்துவம் தெரிந்தால் இந்த காய் எங்கிருந்தாலும் தேடி பிடித்து வாங்கி உண்பீர்கள்.

கோவைக்காயில் அடங்கி இருக்கும் சத்துக்கள்:-

ஆண்டி ஆக்சிடண்ட், பீட்டா கரோடின், பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் பி1, பி2, நார்ச்சத்து போன்றவை அதிகம் இருக்கிறது.

கோவைக்காய் ஜூஸ் தயார் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*கோவைக்காய் – 2

*எலுமிச்சை சாறு – சிறிதளவு

*தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை…

இரண்டு கோவைக்காயை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின்னர் இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்து ஒரு டம்ளருக்கு வடிகட்டிக் கொள்ளவும். பிறகு அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து பருகவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை ஜூஸ் செய்து பருகி வந்தோம் என்றால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.