இது தெரியுமா? புளித்த மாவை பாத்ரூமில் இப்படி பயன்படுத்தினால் 10 வருட உப்பு கறை நொடியில் காணாமல் போகும்!

Photo of author

By Divya

இது தெரியுமா? புளித்த மாவை பாத்ரூமில் இப்படி பயன்படுத்தினால் 10 வருட உப்பு கறை நொடியில் காணாமல் போகும்!

உங்களில் பலரது வீட்டு பாத்ரூமில் உப்பு, மஞ்சள் கறை படிந்து பார்க்க அசிங்கமாக இருக்கும். கெமிக்கல் பொருட்களை பாத்ரூமிற்கு பயன்படுத்தியும் உப்பு கறை, மஞ்சள் கறை போகவில்லை என்று நினைப்பவர்கள் புளித்த அரிசி மாவில் சில பொருட்களை சேர்த்து பாத்ரூமை சுத்தப்படுத்தினால் எளிதில் அனைத்து கறைகளும் நீங்கி விடும்.

தேவையான பொருட்கள்:-

1)புளித்த அரிசி மாவு
2)சீகைக்காய் தூள்
3)ஷாம்பு
4)எலுமிச்சை சாறு
5)சோடா உப்பு

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் புளித்த மாவு(இட்லி மாவு) தேவையான அளவு ஊற்றிக் கொள்ளவும். அதன் பின்னர் அதில் ஒரு பாக்கெட் சீகைக்காய் தூள் மற்றும் ஒரு பாக்கெட் ஷாம்பு சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.

இதில் தண்ணீர் எதுவும் சேர்க்க கூடாது. அதன் பின்னர் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு மற்றும் 1/4 கைப்பிடி அளவு சோடா உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இதை பாத்ரூம் முழுவதும் தெளித்து விடவும். பாத்ரூம் தரை, சுவர் என்று அனைத்து பகுதிகளிலும் தெளித்து 30 நிமிடங்களுக்கு ஊற விடவும்.

பிறகு ஒரு ப்ரஷ் கொண்டு பாத்ரூமை சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்தால் உப்பு கறை, மஞ்சள் கறை அனைத்தும் நீங்கி பாத்ரூம் புதிது போன்று பளிச்சிடும்.