எதனால் சருமம் வறட்சி அடைகிறதுன்னு தெரியுமா? இதை கொஞ்சம் படிங்க..

Photo of author

By Gayathri

எதனால் சருமம் வறட்சி அடைகிறதுன்னு தெரியுமா? இதை கொஞ்சம் படிங்க..

சில பேருக்கு சருமம் ரொம்ப வறட்சியாகி சொரசொரப்பாகவும், சுருக்கமாகவும் இருக்கும். அதுவும் பானிக்காலத்தில் பார்த்துங்கன்னா ரொம்ப மோசமாக இருக்கும். சிலருக்கு கை, கால்களை மற்றவர்களுக்குக் காட்டவே வெட்கப்படுவார்கள். அந்த அளவுக்கு அவர்களுடைய தோல் ரொம்ப வறட்சி அடைந்து காணப்படும்.

ஆனால், சருமம் வறட்சியானால் அது நோய் கிடையாது. பிற காரணிகளால் ஏற்படுவதுதான். ஒரு சிலருக்கு நோய் மற்றும் பரம்பரை காரணங்களால் இந்த மாதிரி சருமம் வறட்சியாக காணப்படும். மேலும் சிலருக்கு பக்டீரியாக்களால் சருமத்தில் ஊடுருவி சரும அழற்சியை ஏற்படுத்திவிடும். பொதுவாக சரும வறட்சி கை, கால், வாய், கன்னம், கண்களுக்கு அடியில் திட்டுக்களாக காணப்படும்.

சரும வறட்சி ஏற்பட காரணம் என்னவென்று பார்ப்போம் –

ஏசி அறை 

ஏசி அறைகளில் அதிகமாக அமர்ந்து வேலை பார்த்தால் சரும வறட்சி ஏற்படும். நம் உடலுக்கு உலர்ந்த காற்று தேவை. அது நம் சருமத்திலுள்ள நீர்ச்சத்தை வெளியேற்றி சருமத்தை களையிழக்க வைத்து விடும். சரும வறட்சி குறைந்த வெப்பநிலை, குறைந்த ஈரப்பதம், வேகமான காற்றால் வறட்சி ஏற்படும்.

வெந்நீர்

வெந்நீரில் அதிகமாக சருமத்தை நனைத்தால் கூட சருமம் வறட்சியாகும். வெந்நீரில் நீண்ட நேரம் இருந்தால், அது சருமத்திலுள்ள எண்ணெய்ப் பசையை  வெளியேற்றி உலர வைத்து விடும்.

தண்ணீர்

அதிகமாக தண்ணீர் குடிக்காவிட்டாலும் சருமம் வறட்சி அடைந்து விடும். மேலும், சருமத்தில் நீர்ச்சத்து குறைந்துவிடும்.

சோப்புக்கள்

பலவகையான சோப்பை பயன்படுத்தினால் சருமத்தில் வறட்சி ஏற்படும். பலவகையான சோப்பை பயன்படுத்தினால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை போக்கிவிடும். சில நேரங்களில் சோப்புக்களால் சரும வெடிப்பு ஏற்பட்டு ரத்தக்கசிவு ஏற்படுத்திவிடும்.

மருந்துகள்

சில மருந்துக்களை நாம் உட்கொண்டால் அது நமது சருமத்தை வறட்சி செய்து விடும். அதிக ரத்த அழுத்த நோய்க்கு டையூரடிக்ஸ் மருந்துகளாலும், பரு மற்றும் ரெட்டினாய்டு போன்றவற்றிற்குப் பயன்படுத்தும் மருந்துகளினாலும் நம் சருமம் வறட்சி அடைந்துவிடும்.

நோய்கள்

சொரியாஸிஸ், நீரிழிவு போன்ற நோய்களால் சிலருக்கு சருமம் வறண்டு விடும். நம் ரத்தத்திலுள்ள குளுக்கோஸின் அளவு மாறுபட்டாலோ, குறைந்தாலோ சருமம் வறட்சி அடையும்.

சருமத்தை பாதுகாக்க

வறண்ட சருமம் ஏற்பட்டால் மாய்ஸ்சரைசரை பயன்படுத்தினால். அப்படி பயன்படுத்தும்போது அது நம் சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கும். ஆண்டு முழுவதும் சூரிய ஒளியிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கும். தளர்வான பருத்தி ஆடைகளை பயன்படுத்துவது நல்லது. சரியான நேரத்தில் சிகிச்சை கொடுக்கவில்லையென்றால் சருமம் வறண்டு தொற்றுநோய்கள், அரிப்பு, தோல் அழற்சி ஏற்படும்.