இனி பால் டீ மற்றும் காபிக்கு குட் பாய் சொல்லிடுங்கள்!! உடல் ஆரோக்கியமாக இருக்க மூலிகை தேநீர் பருகுங்கள்!!

0
29
#image_title

இனி பால் டீ மற்றும் காபிக்கு குட் பாய் சொல்லிடுங்கள்!! உடல் ஆரோக்கியமாக இருக்க மூலிகை தேநீர் பருகுங்கள்!!

நம்மில் பலர் டீ அல்லது காபிக்கு அடிமையாக இருப்போம்.இதை குடித்தால் போதும் உணவு கூட வேண்டாம் என்று நம்மில் பலர் பெரும்பாலான நேரங்களில் இதை பசிக்கு உணவாக எடுத்து இருப்போம்.இப்படி பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பானமாக திகழும் இதில் சில நன்மைகள் இருந்தாலும் அதிகளவு தீமைகளும் இருக்கிறது.

டீ பருக வேண்டும் அதே சமயம் அவை ஆரோக்கியமாதாக இருக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பயன்படுத்தி செய்து பாருங்கள் தேநீர் மிகவும் சுவையாகவும்,ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

செம்பருத்தி இதழ் தேநீர்:

தேவையான பொருட்கள்:-

*செம்பருத்தி பூ இதழ் – 10

*எலுமிச்சை சாறு – 1 1/2 தேக்கரண்டி

*தேன் – தேவையான அளவு

செய்முறை:-

அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் எடுத்து வைத்துள்ள 10 செம்பருத்தி பூ இதழ்களை சேர்த்து கொள்ளவும்.

இதை மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும். 1 1/2 கிளாஸ் தண்ணீர் சுண்டி 1 கிளாஸ் என்று வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.இதில் 1 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தேன் கலந்து பருகினால் உடல் ஆரோக்கியமான இருக்கும்.

துளசி இலை தேநீர்:

தேவையான பொருட்கள்:-

*துளசி இலை – 15

*எலுமிச்சை சாறு – 1 1/2 தேக்கரண்டி

*தேன் – சிறிதளவு

*தண்ணீர் – 1 1/2 கிளாஸ் அளவு

செய்முறை:-

ஒரு பவுலில் 15 துளசி இலைகளை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றிக் கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் எடுத்து சுத்தம் செய்து வைத்துள்ள 15 துளசி இலைகளை சேர்த்து கொள்ளவும்.

இதை மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.1 1/2 கிளாஸ் தண்ணீர் சுண்டி 1 கிளாஸ் என்று வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.இதில் 1 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தேன் கலந்து பருகினால் சளி,இருமல் பாதிப்பு நீங்குவதோடு உடல் ஆரோக்கியமான இருக்கும்.

கொய்யா இலை தேநீர்:

தேவையான பொருட்கள்:-

*கொய்யா இலை – 8

*ஏலக்காய் – 1

*வெல்லம் – சிறிதளவு

செய்முறை;-

ஒரு பவுலில் 8 கொய்யா இலைகளை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளவும்.பின்னர் இதை ஒரு தட்டிற்கு மாற்றி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

அடுத்து அடுப்பில் ஒரு டீ போடும் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள 8 கொய்யா இலைகளை சேர்த்து கொள்ளவும்.அதோடு 1 ஏலக்காயை இடித்து அதில் சேர்த்துக் கொள்ளவும்.

இதை மிதமான தீயில் 5 நிமிடம் கொதிக்க விடவும்.1 1/2 கிளாஸ் தண்ணீர் சுண்டி 1 கிளாஸ் என்று வரும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி சிறிதளவு வெல்லம் சேர்த்து கலக்கி பருகவும்.இவ்வாறு தொடர்ந்து பருகி வந்தோம் என்றால் உடல் எடை,உடம்பு வலி,வயிற்று வலி உள்ளிட்ட பிரச்சனைகள் விரைவில் சரியாகிவிடும்.