பெண்களே உங்கள் முகத்தில் முடி வளர்ச்சி இருக்கிறதா!!? இதோ அதை நீக்க எளிமையான 4 டிப்ஸ்!!!

0
37
#image_title

பெண்களே உங்கள் முகத்தில் முடி வளர்ச்சி இருக்கிறதா!!? இதோ அதை நீக்க எளிமையான 4 டிப்ஸ்!!!

பெண்களின் முகத்தில் தேவையற்ற இடங்களில் முடி வளர்ச்சி இருக்கும். இதை நீக்குவதற்கு பெரும்பாலான பெண்கள் செயற்கை வழிமுறையை பயன்படுத்துவார்கள். அவர்களுக்காக இந்த பதிவில் முகத்தில் தேவையில்லாமல் வளரும் முடியை நீக்க இயற்கையான முறையில் என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

வழிமுறை 1

தேவையான பொருள்கள்…

* சர்க்கரை
* தண்ணீர்
* எலுமிச்சை சாறு

செய்முறை மற்றும் பயன்படுத்தும் முறை…

35 மிலி அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளை வேண்டும். பிறகு இதில் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கொள்ளை வேண்டும். மற்றும் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும்.

கொதித்த பிறகு இறக்கி ஆற வைக்க வேண்டும். இந்த கலவை ஆறிய பின்னர் முகத்தில் முடி வளர்ச்சி இருக்கும் இடங்களில் தேய்க்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழிந்து முடி வளரும் திசைக்கு எதிர் திசையில் துணியை கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.

வழிமுறை 2:

தேவையான பொருட்கள்…

* முட்டை
* அரிசி மாவு
* சர்க்கரை

செய்முறை மற்றும் பயன்படுத்தும் முறை…

முட்டையின் வெள்ளைக் கரு எடுத்துக் கொள்ளை வேண்டும். அதில் அரை டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன்
சர்க்கரை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் இந்த கவலையை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழிந்து முகத்தை ஸ்கிரப் செய்ய வேண்டும்.

வழிமுறை 3:

தேவையான பொருட்கள்…

* வாழைப்பழம்
* ஓட்ஸ்

செய்முறை மற்றும் பயன்படுத்தும் முறை…

நன்கு பழுத்த வாழைப்பழம் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் எடுத்துக் கொள்ளை வேண்டும். இந்த இரண்டையும் நன்றாக கலந்து முகத்தில் முடி வளர்ச்சி இருக்கும இடங்களில் தேய்த்து காய வைக்க வேண்டும். காய்ந்த பிறகு கழுவி விடலாம்.

வழிமுறை 4:

தேவையான பொருள்கள்…

* பப்பாளி
* மஞ்சள் தூள்

செய்முறை மற்றும் பயன்படுத்தும் முறை…

பப்பாளியை முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்கு பயன்படுத்தலாம். பப்பாளியில் உள்ள பப்பெய்ன் என்ற நொதி முகத்தில் முடிகளின் வேர்காலை உடைத்து முடிவளர்ச்சியை தடுக்கின்றது. எனவே பப்பாளி சிறிதளவு எடுத்து அதனுடன் மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தேய்க்க வேண்டும். பின்னர் முகத்தை மசாஜ் செய்து கழுவி விடலாம்.

மருத்துவரின் ஆலோசனை ஆலோசனைப்படி மேற்கூறிய எந்த வழிமுறையையும் பயன்படுத்தி பெண்கள் முகத்தில் வளரும் முடியை தடுக்கலாம்.